malware Twitter
உலகம்

உங்கள் ஸ்மார்ட் ஃபோனில் இந்த 50 செயலிகள் இருக்கா? - உடனே டெலிட் செய்யுங்கள்

ஜோக்கர் மால்வேருடன், ஃபேஸ் ஸ்டீலர், காபர் மால்வேர் போன்ற வைரஸ்களும் சமீப காலமாக மொபைல் ஃபோன் செயலிகள் வழி பரவிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

Gautham

இன்றைய தேதியில் இணையப் பாதுகாப்பு என்பது கேள்விக் குறியாகிக் கொண்டிருக்கிறது. கண்ணுக்கே தெரியாத கம்ப்யூட்டர் வைரஸ்கள் நம் ஸ்மார்ட்ஃபோன், கணினிகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்கின்றன.

சமீபத்தில் கூகுள் நிறுவனம் தன்னுடைய ப்ளே ஸ்டோரில் இருந்து 50 செயலிகளை நீக்கியுள்ளதாக Zscaler Threatlabz என்கிற சைபர் பாதுகாப்பு பகுப்பாய்வு நிறுவனம் கூறியுள்ளது. அச்செயலிகள் ஜோக்கர் என்கிற மால்வேர் வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அச்செயலிகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருவோர்களும் தங்கள் ஃபோன்களிலிருந்து நீக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த செயலிகளைப் பயன்படுத்துபவர்கள், தங்கள் ஸ்மார்ட்ஃபோன்களை ஆன்டி வைரஸ் கொண்டு ஒரு முறை சரிபார்க்கவும் பரிந்துரைக்கிறது. ஜோக்கர் மால்வேருடன், ஃபேஸ் ஸ்டீலர், காபர் மால்வேர் போன்ற வைரஸ்களும் சமீப காலமாக மொபைல் ஃபோன் செயலிகள் வழி பரவிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போது கூகுள் நீக்கியுள்ள செயலிகளில் பெரும்பாலானவை, ஜோக்கர் மால்வேரால் பாதிக்கப்பட்டிருப்பதாக்க Zscaler Threatlabz நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது. இந்த ஜோக்கர் மால்வேர் பொதுவாக ஆண்டிராய்ட் பயனர்களை இலக்கு வைத்துத் தாக்கக்கூடிய மால்வேர்களிலேயே மிகவும் பிரபலமானவை.

ஒருமுறை ஒருவரின் ஸ்மார்ட்ஃபோனில் ஜோக்கர் மால்வேர் செயல்படத் தொடங்கிவிட்டால், நம் ஃபோனில் தன் இஷ்டத்துக்கு டயலர்கள், நம்மை உளவு பார்க்கும் ஸ்பைவேர்களை எல்லாம் இன்ஸ்டால் செய்துவிடும். நம்மைப் பல விலை அதிகமான சப்ஸ்கிரிப்ஷன் திட்டங்களை அடிக்கடிப் பார்க்க வைக்கும்.

இந்த மால்வேர் நம் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு வரும் எஸ் எம் எஸ் செய்திகள், நம் தொடர்பு எண்கள், நம் ஸ்மார்ட்ஃபோன் தொடர்பான விவரங்களைத் திருடும், அதோடு பிரீமியம் டபிள்யூ ஏ பி (WAP) சேவைகளை சைன் இன் செய்ய வைக்கும்.

நீக்கப்பட்ட செயலிகளின் பட்டியல் இதோ...

Universal PDF Scanner

Private Message

Premium SMS

Smart Messages

Text Emoji SMS

Blood Pressure Checker

Funny Keyboard

Memory Silent Camera

Custom-Themed Keyboard

Light Messages

Themes Photo Keyboard

Send SMS

Themes Chat Messenger

Instant Messenger

Cool Keyboard

Font Emoji Keyboard

Mini PDF Scanner

Smart SMS Messages

Creative Emoji Keyboard

Fancy SMS

Fonts Emoji Keyboard

Personal Message

Funny Emoji Message

Magic Photo Editor

Professional Messages

All Photo Translators

Chat SMS

Smile Emoji

Wow Translator

All Language Translator

Cool Messages

Blood Pressure Diary

Chat Text SMS

Hi Text SMS

Emoji Theme Keyboard

iMessager

Text SMS

Camera Translator

Come Messages

Painting Photo Editor

Rich Theme Message

Quick Talk Message

Advanced SMS

Professional Messenger

Classic Game Messenger

Style Message

Private Game Messages

Timestamp Camera

Social Message

Simple Note Scanner

உடனடியாக இந்த செயலிகளை நீக்கிவிட்டு, உங்கள் ஆன்டிவைரஸ் மூலம் ஃபோனை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?