Meerab Twitter
உலகம்

இரவில் KFC ஊழியர்; பகலில் கல்லூரி மாணவி - ஒரு Inspiring இளம் பெண்!

பாகிஸ்தானின் லாகூரை சேர்ந்த மீரப் என்ற பெண் ஒரு ஃபேஷன் டிசைனிங் மாணவி. பகலில் கல்லூரிக்கு சென்று கல்வி பயிலும் இவர் இரவு நேரங்களில் கே எஃப் சி உணவு டெலிவரி ஏஜன்ட்டாக வேலை பார்க்கிறார்.

Keerthanaa R

படித்துக்கொண்டே பகுதி நேர வேலை செய்வது தற்போது மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது. குடும்ப சூழல் காரணமாக படிப்பை விட வேண்டிய நிலை ஏற்பட்ட காலம் கடந்து விட்டது. படித்துக்கொண்டிருக்கும்போதே வேலை செய்ய தொடங்குவதால் அவர்களது திறன்களையும் மாணவர்கள் வளர்த்துக்கொள்ள முடிகிறது.


இங்கும் பாகிஸ்தானை சேர்ந்த மாணவி ஒருவர் பகுதி நேரமாக வேலை செய்துகொண்டும், தனது கல்லூரி படிப்பையும் மேற்கொண்டு வருகிறார்.

பாகிஸ்தானின் லாகூரை சேர்ந்த மீரப் என்ற பெண் ஒரு ஃபேஷன் டிசைனிங் மாணவி. பகலில் கல்லூரிக்கு சென்று பயிலும் இவர் இரவு நேரங்களில் கே எஃப் சி இன் உணவு டெலிவரி ஏஜன்ட்டாக வேலை பார்க்கிறார்.

இப்படி தங்கள் கனவுகளுக்காக அயராது உழைப்பவர்களை சமூக வலைத்தளம் அடையாளம் காணத் தவறியது இல்லை. மீரபையும் கண்டுகொண்டுள்ளது இந்த உலகம்.

ஃபிஸ்ஸா இஜாஸ் என்ற பெண் தனது LinkedIn தளத்தில் மீரப் பற்றி ஒரு பதிவை பகிர்ந்திருந்தார்.அதில் அவர் கூறியிருந்ததாவது, "நான் கே எஃப் சி இல் உணவு ஆர்டர் செய்திருந்தேன். எனது ஆர்டரை டெலிவரி செய்யப்போவதாகக் கூறி ஒரு பெண் எனக்கு கால் செய்தார்.

உற்சாகத்தில் நானும், எனது தோழிகளும் அவர் வரும் வரை வெளியில் காத்திருந்து, அவரிடம் உரையாடினோம். இளங்கலை ஃபேஷன் டிசைனிங் படித்துக்கொண்டிருக்கும் மீரப், தனது கல்லூரி ஃபீஸ் கட்டுவதற்காக இரவு நேரங்களில் ஃபுட் டெலிவரி ஏஜன்ட்டாக வேலை பார்ப்பதாக கூறினார்.

தான் படித்து முடிக்கும் வரை இந்த வேலையை தொடரப்போவதாகக் கூறிய மீரப், சொந்தமாக ஒரு ஃபேஷன் பிராண்ட் தொடங்க வேண்டும் என்ற கனவோடு உள்ளார்.

அவருக்கு வாழ்த்துக்கள். இவரைப்போலவே இன்னும் நிறையப் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்கள் தங்கள் மனம் விரும்புவதை தைரியமாக செய்யட்டும் !"

மேலும் மீரபுடைய கல்லூரி கட்டணத்தை ஒரு தொண்டு நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தனர். எனினும், தனது படிப்புக்கு தேவையான மற்ற செலவுகளுக்காகவும், தன் தாயின் மருத்துவ செலவுக்காகவும் அவர் இந்த பகுதி நேர வேலையை செய்வதாகவும் கூறினார்.

பாகிஸ்தானில் கே எஃப் சி டெலிவேரி ஏஜன்ட்களாக நிறைய பெண்கள் வேலை பார்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?