North Korea : 2வது முறையாக பொதுவெளியில் அதிபரின் மகள் - இவரது பெயர் தெரியுமா? Twitter
உலகம்

North Korea : 2வது முறையாக பொதுவெளியில் அதிபரின் மகள் - இவரது பெயர் தெரியுமா?

Antony Ajay R

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் மகள் இரண்டாவது முறையாக பொதுவெளியில் தோன்றியிருக்கிறார். இந்த முறை ஏவுகணை ஆராய்ச்சியாளர்களை அவர் சந்தித்தார். இந்த மாதம் ஏவப்பட்ட Hwasong-17 ஏவுகணை திட்டத்தில் பணியாற்றிய வீரர்கள் மற்றும் ஏவுகணை ஆராய்ச்சியாளர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

எதிர்பாராத விதமாக கிம் ஜாங்க் உன்னின் மகள் பொதுவெளியில் தோன்றியது அடுத்த அரசியல் வாரிசாக அவருக்கு வழங்கப்படும் பயிற்சியா என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்போது வரை கிம் ஜாங் உன் மகளின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயதும் யாருக்கும் தெரியாது.

தென்கொரியாவின் தேசிய புலனாய்வு பிரிவு கூறுவதன் படி, இந்த பெண் கிம் ஜாங் உன்னின் இரண்டாவது மகள் கிம் ஜு ஏ, இவருக்கு 10 வயது இருக்கலாம்.

புதிதாக வடகொரிய அரசு ஊடகம் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் கிம் ஜங் உன்னின் இரண்டாவது மகள் அவருக்கு அருகில் நின்ற படி இராணுவத்தினருடன் இருக்கிறார்.

வடகொரிய அரசு ஊடகமான கொரியன் சென்டரல் நியூஸ் ஏஜென்ஸி KCNA அவரை அதிபரின் மிகவும் பிரியமான மகள் என்று கூறியுள்ளது.

அதிபர் கிம் ஜாங் உன்னின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த எந்த தகவல்களும் பொதுவெளியில் கிடையாது. தென் கொரிய ஊடகங்கள் கிம் 2009ம் ஆண்டு ரி சொல் என்பவரை திருமணம் செய்துகொண்டார் அவர்களுக்கு 2 மகள் மற்றும் 1 மகன் என 3 குழந்தைகள் உள்ளனர்.

கிம் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதை விட அவரது மகள் உலகுக்கு விரைவாக அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டார் என்றே ஊடகங்கள் கூறுகின்றன. கிம் இளைஞனாக வளர்ந்த பின்னர் தான் உலகுக்கு காட்டப்பட்டார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?