Li Wenliang ட்விட்டர்
உலகம்

Li Wenliang : யார் இவர்? சீன அரசு தண்டித்த இவரை மக்கள் ஹீரோவாக கொண்டாட காரணம் என்ன?

கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திலிருந்து பிரிக்கப்பட்டு வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டனர். பயணங்கள் மற்றும் மக்கள் ஒன்றுகூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

Keerthanaa R

சீனாவின் ஜீரோ கோவிட் கட்டுப்பாடுகள் தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், பலரும் மறைந்த சீன மருத்துவர் லீ வென்லியாங்கை நினைவுக்கூறி வருகின்றனர்.

இணையம் மூலம் பலரும் அவருக்கு நன்றி தெரிவித்தும், ஆறுதல் கூறியும், தங்களது மனவருத்தங்களை தெரிவித்தும் செய்திகள், பதிவுகளை பொழிந்து வருகின்றனர்.

ஒட்டுமொத்த சீனாவும், இந்த அளவுக்கு கவலைக்கொள்ளும் இந்த லீ வென்லியாங் யார்?

சீனாவை சேர்ந்த கண் மருத்தவர் லீ வென்லியாங். 33 வயதான இவர் வூஹானின் சென்ட்ரல் மருத்துவமனையில் பணியாற்றிவந்தார்.

உலகையே புரட்டிப்போட்ட கொரோனா வைரஸ் 2019ஆம் ஆண்டு சீனாவில் தான் முதன் முதலில் கண்டறியப்பட்டது.

இதன் வீரியத்தை, தாக்கத்தை பற்றி தொடக்கத்திலேயே அறிந்திருந்த மருத்துவர்களில் ஒருவர் லீ வென்லியாங். இந்த வைரஸ் எந்த விதமான பாதிப்பையும் உண்டாக்கும் முன், எச்சரிக்கை மணி அடித்தவர்.

கடந்த 2019 டிசம்பர் மாதம், 30ஆம் தேதியில், மருத்துவர் லீ தனது சமூக வலைத்தள பக்கங்கள் மூலமாக கொரோனா வைரஸ் பற்றி எச்சரிக்க முயற்சித்தார்.

மர்மமான நிமோனியா பாதிப்புகள் சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் கண்டறியப்பட்டதாகவும், அதே சமயத்தில் SARS வைரஸ் பாதிப்பு ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் மருத்துவர் வென்லியாங்கிற்கு தகவல்கள் கிடைத்தது.

இது குறித்து வீ சாட் மூலம் மருத்துவர் லீ, வூஹான் பல்கலைக்கழகத்தில் உள்ள அவரது நெருங்கிய நண்பர்களிடம் பகிர்ந்தார். இந்த தகவலை ரகசியமாக வைக்க அவர் எச்சரித்திருந்தும், செய்தி வெளியில் கசிந்தது.

இந்த வைரஸ் பரவினால், மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனவும், உயிரிழப்புகள் பெருமளவில் ஏற்படலாம் எனவும் லீ எச்சரித்திருந்தது பொது மக்கள் காதுகளை வந்தடைந்தது.

இதனால் மக்களுக்கு "தவறான அறிக்கைகளை" பரப்புவதாகவும், தேவையற்ற பீதியை கிளப்புவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு சீன அரசால் தண்டிக்கப்பட்டார் லீ.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக, எந்த வைரஸ் குறித்து லீ எச்சரிக்க நினைத்தாரோ, அதே கோவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்டார். 2020 ஆம் ஆண்டு 7 பிப்ரவரி அன்று இறந்து போனார்.

இவரது மரணம் மக்கள் மத்தியில் பேசுபொருளானது. வருத்தத்தையும் கோபத்தையும் தூண்டியது.

கொரோனா தொற்றும் மெல்ல அதிகரிக்க தொடங்கிய நிலையில், சீனாவும் தொற்றைக் கட்டுப்படுத்த Xi Jinping-ன் ஜீரோ கோவிட் கொள்கையை அறிவித்தது.

மற்ற சில நாடுகளும் இந்த ஜீரோ கோவிட் கொள்கையை கடைப்பிடித்தது.

மற்ற நாடுகளில் பாதிப்புகள், உயிரிழப்புகள், ஊரடங்குகள், பொருளாதார நெருக்கடி என பல இன்னல்கள் ஏற்பட்டது. தடுப்பூசிகள் அறிமுகம் செய்யப்பட்டது. அனைத்தையும் தாண்டி வந்த பிறகு, தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.

சீனா மட்டும் தன் ஜீரோ கோவிட் கொள்கையை கைவிடாமல் இருந்தது. அந்நாட்டின் தலைவர்கள் இதை வெற்றியாக கருதினர்.

ஆனால், உண்மையில், திடீர் ஊரடங்கு காரணமாக சிலர் போதுமான உணவின்றி சிரமப்பட்டனர்.

கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திலிருந்து பிரிக்கப்பட்டு வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டனர். பயணங்கள் மேற்கொள்ள மற்றும் மக்கள் ஒன்றுகூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது சீனாவின் ஜீரோ கோவிட் கட்டுபாடுகள் தளரத் தொடங்கியவுடன், அந்நாட்டு மக்கள், மருத்துவர் லீ வென்லியாங்கை நினைவுக்கூறி வருகின்றனர்.

அவரது சமூக வலைத்தள பக்கத்திற்கு சென்று தங்களது ஆறுதல்கள், இரங்கல் செய்திகளை பதிவு செய்து வருகின்றனர்.

"ரயிலில் திடீரென உங்களை நினைவுக்கூர்ந்து அழத்தொடங்கிவிட்டேன். டாக்டர் லீ, இப்போது எல்லாம் முடிந்துவிட்டது, விடியல் வந்துவிட்டது" என்று ஒருவர் பதிவிட்டிருந்தார்.

"டாக்டர் லீ, நம் நகரம் ஊரடங்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தொற்றுநோய் இறுதியாக முடிந்துவிட்டது என்று பலர் கூச்சலிடுகின்றனர்.

ஆனால் இது உண்மையில் முடிந்துவிட்டதா?" என்று மற்றொருவர் கேட்டிருந்தார்.

ஜீரோ கோவிட் கட்டுபாடுகளால் வைரஸ் தொற்று மரண எண்ணிக்கை குறைவாகவே இருந்ததாக சீனா இதுவரை தெரிவித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?