மெஸ்ஸி  ட்விட்டர்
உலகம்

FIFAWC: மெஸ்ஸிக்கு ரூ.8 கோடி தருவதாக சொன்ன ஓமன் வழக்கறிஞர் - எதற்காக?

Keerthanaa R

ஃபிஃபா உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு அர்ஜென்டினா அணி கேப்டன் மெஸ்ஸிக்கு கத்தார் நாட்டின் பாரம்பரிய உடையான பிஷ்ட் அங்கி வழங்கப்பட்டது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

இந்நிலையில், மெஸ்ஸியின் இந்த பிஷ்ட்டை 8 கோடி ரூபாய் விலை கொடுத்துவாங்க முன்வந்துள்ளார் வழக்கறிஞரும், ஓமன் நாட்டு பாராளுமன்ற உறுப்பினருமான அகமத் அல் பர்வானி.

ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2022 கத்தாரில் நடைபெற்றது. உலகக்கோப்பை போட்டிகளுக்காக ஆடம்பர செலவுகள் செய்து, உள்கட்டமைப்பு வசதிகளைமாற்றியமைத்தது கத்தார்.

உலகக்கோப்பை இறுதிக்கு லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி முன்னேறியது. ஃபைனலில் நடப்பு சாம்பியனான பிரான்ஸை எதிர்கொண்ட அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றது.

இது அர்ஜென்டினா அணிக்கு 3வது உலகக்கோப்பையாகும். அர்ஜென்டினாவின் வெற்றியை கொண்டாடும் விதமாகவும், மெஸ்ஸியை கௌரவிக்கும் விதமாகவும் அரபு நாட்டின் பாரம்பரிய உடையான பிஷ்ட் எனப்படும் கருப்பு அங்கி அவருக்கு வழங்கப்பட்டது.

இந்த பிஷ்ட்டை அரசக் குடும்பத்தை சேர்ந்தவர்களும், மதத் தலைவர்களும் மட்டுமே அணிவார்கள்.

மெஸ்ஸி அந்த கருப்பு அங்கியுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில், மெஸ்ஸிக்கு வழங்கப்பட்ட அந்த பிஷ்ட்டினை விலைகொடுத்து வாங்க ஒருவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஓமன் பாராளுமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான அகமது அல் பர்வானி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், "அந்த பிஷ்ட்டை எனக்கு நீங்கள் வழங்க உங்களுக்கு நான் 1 மில்லியன் டாலர்கள் தருகிறேன்" என பதிவிட்டிருந்தார்

ஒட்டக முடி மற்றும் ஆட்டு கம்பளியால் ஆன இந்த பிஷ்ட்டினை, கத்தாரின் எமிர் மெஸ்ஸிக்கு வழங்கினார். இதனை அணிந்துக்கொண்டே மெஸ்ஸியும் உலகக்கோப்பையை பெற்றுக்கொண்டார்.

மெஸ்ஸிக்கு அணிவிக்கப்பட்ட இந்த பிஷ்ட்டை பொக்கிஷமாக கருதி, பாதுகாத்து, உலக மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்பது அவரது விருப்பம் என அவர் தெரிவித்திருந்தார்.

இதனால் அந்த பிஷ்ட்டை தன்னிடம் கொடுக்க மெஸ்ஸிக்கு அவர் 1 மில்லியன் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 8 கோடி ரூபாய் வழங்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?