list of Asian countries Indians can travel without visa  Twitter
உலகம்

வெளிநாடுகளுக்கு Trip போக ஆசையா? விசா இல்லாமல் பயணம் செய்யக் கூடிய ஆசிய நாடுகள் தெரியுமா?

குறிப்பிட்ட சில நாடுகளுக்குச் செல்ல இந்திய குடிமக்களுக்கு விசா எடுக்கத் தேவையில்லை. நம் நாடு பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே போதுமானது.

Priyadharshini R

வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் செல்ல விருப்பம் இருந்தும் விசா இல்லை என்று கவலைப்படுகிறீர்களா? இந்த பதிவு உங்களுக்கானது.

குறிப்பிட்ட சில நாடுகளுக்குச் செல்ல இந்திய குடிமக்களுக்கு விசா எடுக்கத் தேவையில்லை. நம் நாடு பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே போதுமானது.

அப்படி இல்லை என்றால் சில நாடுகளில் Visa on Arrival என்கிற விசாவுடன் அனுமதிக்கப்படுவார்கள். குறுகிய கால பயணங்கள் மேற்கொள்ளும் பயணிகளுக்கு இது வழங்கப்படுகிறது.

அப்படி விசா இல்லாமல் பயணம் செய்யக் கூடிய ஆசிய நாடுகள் பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.

பூட்டான்

பூட்டானுக்குச் செல்ல விரும்பும் இந்தியப் பயணிகள் இப்போது விசா இல்லாமல் பயணிக்க முடியும். இதற்காக நாம் செய்ய வேண்டியது, செல்லுபடியாகும் கீழ்க்காணும் 2 பயண ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கையோடு கொண்டு செல்ல வேண்டும்.

  • குறைந்தபட்சம் 6 செல்லுபடி மாதங்கள் கொண்ட இந்திய பாஸ்போர்ட்

  • இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள வாக்காளர் அடையாள அட்டை

இந்தோனேசியா

அழகான நாடான இந்தோனேசியாவிற்கு பயணம் செய்ய இந்தியப் பயணிகளுக்கு விசா தேவையில்லை.

ஆனால் உங்கள் பயண காலம் 30 நாட்களுக்குள் இருக்க வேண்டும். இமிக்ரேஷன் கவுண்டரில் விசா விலக்கு முத்திரையை (visa exemption stamp) பெற வேண்டும்.

இந்தோனேசியாவில் 30 நாட்களுக்கு மேல் சுற்றுப்பயணம் செய்கிறீர்கள் என்றால், நீங்கள் அங்கு நுழையும் போது VOA-க்கு விண்ணப்பிக்கலாம். Visa on Arrival என்பது நீங்கள் ஒரு நாட்டிற்குச் செல்லும் போது வழங்கப்படும் விசா ஆகும்.

லாவோஸ்

பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ள அழகான நாடு லாவோஸ், அங்கு இந்தியர்கள் விசா தொந்தரவு இல்லாமல் பயணம் செய்யலாம்.

லாவோஸ் விசாவிற்கு முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. லாவோஸில் VOA-ஐ எளிதாகப் பெறலாம் என்றாலும் 30 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

அதே போல குறைந்தது 6 மாதங்களுக்குச் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டை பயணி வைத்திருக்க வேண்டும்.

மகாவ்

மகாவ் நாட்டிற்குச் செல்ல விசா தேவையில்லை, என்றாலும் 30 நாட்கள் மட்டுமே பயணம் செய்ய இந்தியப் பயணிகள் இதற்கு திட்டமிட முடியும்.

இந்நாட்டில் நுழையும் ஒருவர் நுழையும் தேதியில் இருந்து குறைந்தது 6 மாதங்களுக்குச் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டை வைத்திருக்க வேண்டும்.

மாலத்தீவுகள்

இந்த அழகிய தீவை காண திட்டமிடும் இந்தியப் பயணிகளுக்கு VOA-வை இலவசமாக வழங்குகிறது.

மாலத்தீவில் இந்தியர்களுக்கான ஆன்-அரைவல் டூரிஸ்ட் விசாக்கள், 30 நாட்களுக்குச் செல்லுபடியாகும்.

இது 90 நாட்கள் வரை நீட்டிக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மியான்மர்

இந்தியப் பயணிகள் மியான்மருக்கு செல்ல VOA-ஐ எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம்.

இது மியான்மரில் அதிகபட்சமாக 30 நாட்கள் தங்கியிருக்கும் வாய்ப்பை வழங்குகிறது.

நேபாளம்

அண்டை நாடான நேபாளத்திற்குச் செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை. எனினும் இந்திய அரசு, இந்தியத் தேர்தல் ஆணையம் போன்றவற்றால் வழங்கப்பட்ட சரியான ஆவண சான்றுகளை வைத்திருக்க வேண்டும்.

தாய்லாந்து

தாய்லாந்துக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்கள் விசா ஆன் அரைவல் (VOA ) திட்டத்தின் கீழ் நாட்டினுள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.

குறைந்தது 30 நாட்களுக்குச் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டை ஒருவர் வைத்திருக்க வேண்டும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?