லிட்டில் ஜப்பான் மாதிரி லிட்டில் இந்தியா எங்கிருக்கிறது? அதில் என்னவெல்லாம் இருக்கிறது? Twitter
உலகம்

லிட்டில் ஜப்பான் மாதிரி லிட்டில் இந்தியா எங்கிருக்கிறது? அதில் என்னவெல்லாம் இருக்கிறது?

இந்தியா உணவுப் பழக்கத்தில் வேற்றுமை நிறைந்தது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு பகுதிக்கும் இருக்கும் உணவுப்பழக்கங்களின் நகலை லிட்டில் இந்தியாவில் பார்க்க முடியும்.

Antony Ajay R

சிங்கப்பூரில் இருக்கும் லிட்டில் இந்தியா தனித்துவமான மாவட்டமாகும்.

வண்ணமயமான கட்டடங்கள், பரபரப்பான மனிதர்களுடன் சுகமான உணர்வைத் தரக்கூடியது இந்த பகுதி.

இந்த இடத்தில் இந்திய கலாச்சாரக் கூறுகளை அதிகமாக காண முடியும் என்பதனால் இது லிட்டில் இந்தியா என அழைக்கப்படுகிறது.

இந்திய பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் கூறுகளை வெளிக்காட்டும் வகையில் கட்டிடங்கள் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

சிங்கப்பூரில் அதிக இந்தியர்கள் வாழ்வது நாம் அறிந்ததே. ஆனால் லிட்டில் இந்தியா என்ற இடம் பற்றி தெரிந்திருக்கிறோமா?

அக்கம் பக்கத்தில் இருந்த இந்திய மக்கள் தங்களது கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்காக இந்த நகரத்தை உருவாக்கியிருக்கின்றனர். இந்தியராக இருப்பதைக் கொண்டாடும் நோக்கில் உருவாக்கப்பட்டது.

ஆடைகள், அலங்கார பொருட்கள், உணவு வகைகள் என இந்திய பொருட்களை இங்கு வாங்க முடியும். இந்த சந்தை எப்போதும் சலசலப்பாகவே இருக்கும்.

இங்குள்ள கடைகள் கட்டிடங்கள் அனைத்திலும் பிரகாசமான நிறங்களில் வண்ணம் தீட்டப்பட்டிருக்கும். மேலும் பல டிசைன்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

இந்தியா உணவுப் பழக்கத்தில் வேற்றுமை நிறைந்தது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு பகுதிக்கும் இருக்கும் உணவுப்பழக்கங்களின் நகலை லிட்டில் இந்தியாவில் பார்க்க முடியும்.

தீபாவளி மற்றும் தைப்பூசம் போன்ற இந்திய திருவிழாக்கள் அங்கு சிறப்பாக கொண்டாடப்படும். மொத்த நகரும் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலங்கள் நடைபெறும்.

லிட்டில் இந்தியா ஒரு ஆன்மிக தலமாகவும் கருதப்படுகிறது. புகழ்பெற்ற கோவில்கள், மசூதிகள் இங்கு இருக்கின்றன.

சிங்கப்பூர் செல்பவர்கள் நிச்சயம் லிட்டில் இந்தியாவையும் பார்க்க வேண்டும். அங்கு செல்லும்போது கேமராவை மறந்துவிடக் கூடாது.

வண்ணமயமான தெருக்களில் திரும்பும் இடமெல்லாம் இன்ஸ்டாகிராமுக்கு ஏற்ற புகைப்படங்களை எடுக்க முடியும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?