Live 8-cm long worm found in brain of Australian woman
Live 8-cm long worm found in brain of Australian woman Twitter
உலகம்

பெண்ணின் மூளைக்குள் நெளிந்த 8 செ.மீ நீளமுள்ள புழு - மருத்துவர்கள் கண்டுபிடித்தது எப்படி?

Priyadharshini R

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 64-வயது பெண் ஞாபக மறதியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

தொடர்ந்து வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வறட்டு இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளும் அந்த பெண்ணுக்கு இருந்துள்ளது. இதனையடுத்து அந்த பெண் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்களுக்கு ஆரம்பத்தில் அந்த பெண்ணுக்கு என்ன பாதிப்பு என்று கண்டறிய முடியவில்லை.

பின்னர் தலைப்பகுதியில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்து பார்த்த போது, மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த பெண்ணின் மூளைக்குள் 8 செ.மீட்டர் நீளத்தில் உயிருடன் ஒரு ஒட்டுண்ணி புழு இருந்தது கண்டறியப்பட்டது.

இதற்கு முன்பாக மனித மூளைக்குள் ஒரு ஒட்டுண்ணி இருந்ததாக மருத்துவ வரலாறு இல்லை என்கின்றனர் அந்த மருத்துவர்கள்.

பெண்ணின் மூளையில் ஓபிடாஸ்காரிஸ் ராபர்ட்ஸி என்ற இனத்தை சேர்ந்த லார்வா புழு இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவ வரலாற்றிலேயே இது ஒரு நம்ப முடியாத விஷயமாக பார்க்கப்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

பொதுவாக இதுபோன்ற ஒட்டுண்ணிகள் இரைப்பையில் தான் காணப்படும். மலைப்பாம்பின் கழிவு மூலமாக இந்த ஒட்டுண்ணி புல்வெளிக்கு வந்து இருக்கலாம் என்றும், அதன் பின்னர் ஒட்டுண்ணி பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலுக்குள் ஏதோ ஒரு வகையில் சென்றிருக்க வாய்ப்பு உள்ளது என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

விலங்குகளிடமிருந்து மக்களுக்கு நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்திருப்பதை இது எடுத்துக் காட்டுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?