நைல் நதி முதல் அமேசான் நதி வரை உலகின் மிகப்பெரிய நதிகள் பற்றி தெரியுமா? Twitter
உலகம்

நைல் நதி முதல் அமேசான் நதி வரை உலகின் மிகப்பெரிய நதிகள் பற்றி தெரியுமா?

உலகின் நீளமான நதி பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஆனால், இதுவரை நீங்கள் அறியாத தகவல்கள் பல இன்னமும் உள்ளன.

Priyadharshini R

ஒரு நாட்டில் ஓடும் நதி தான் அந்நாட்டின் செழுமையை தீர்மானிக்கிறது. இப்படி மனித உயிர்களுக்கு உறைவிடமாக இருக்கும் உலகின் மிகப்பெரிய நதிகளின் பட்டியல் இதோ உங்கள் கவனத்திற்கு.

நைல் நதி

உலகளவில் அதிக தூரம் பயணிக்கக்கூடிய நதி என்று பெயர் பெற்றுள்ள நைல் சுமார் 6650 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. மத்திய ஆப்பிரிக்காவில் உருவாகும் இந்த நதியானது எகிப்து, உகாண்டா, எத்தியோப்பியா மற்றும் சூடான் போன்ற நாடுகளை சுற்றி ஓடுகிறது.

அமேசான் நதி

6575 கிலோ மீட்டர் தூரம் கொண்ட அமேசான் நதி உலகின் இரண்டாவது மிகப்பெரிய நதியாகும். தென் அமெரிக்காவை உறைவிடமாகக் கொண்ட இந்த நதி பரந்து, விரிந்த அமைப்பைக் கொண்டவை.

யாங்சே நதி

சுமார் 6300 கிலோ மீட்டர் வரை நீண்டு செல்லக்கூடிய யாங்சே நதி சீனாவை மையமாகக் கொண்டது. உலகின் மூன்றாவது பெரிய நதியாகக் கருதப்படும் யாங்சே, சீனாவின் செழிப்பிற்கு வித்திடுகிறது.

மிஸிஸிப்பி நதி

உலகின் நான்காவது பெரிய நதியான மிஸிஸிப்பி அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் பெரிய அளவிலான பகுதிகளை உள்ளடக்கி பாய்கிறது. 6275 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லக்கூடிய இந்த நதியானது மிஸிஸிப்பி, முசோரி, ஜெபர்சன் போன்ற கிளை நதிகளை உள்ளடக்கியது.

யெனிசை நதி

ரஷ்யாவை பிறப்பிடமாகக் கொண்ட உலகின் ஐந்தாவது பெரிய நதி யெனிசை. மங்கோலியாவின் மலைப்பகுதிகளில் இருந்து உருவாகும் இந்த நதியானது ஆர்டிக் பெருங்கடல் வரைக்கும் 5539 கிலோ மீட்டர் தூரங்களைக் கொண்டது.

மஞ்சள் நதி

'ஹுவாங் கி' என்று சொல்லப்படக்கூடிய மஞ்சள் நதியானது 5464 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கக்கூடியது. இந்த நதி சீனாவின் நாகரீகம், வரலாறு, கலாச்சாரத்தின் முக்கிய அடையாளமாக பார்க்கப்படுகிறது.

ஓப்-இர்டிஷ் நதி

ஓப் நதி என்று அழைக்கப்படக்கூடிய ஓப்-இர்டிஷ் நதி சைபீரியாவில் ஓடக்கூடிய யெனிசை, லீனா போன்ற முக்கியமான நதிகளில் ஒன்று. 5410 கிலோ மீட்டர் வரை பயணிக்ககூடிய இந்த நதியானது அட்லாண்டிக் மலைகளில் துவங்கி ஆர்டிக் பெருங்கடல் வரை நீண்டு கொண்டே போகிறது.

பரானா நதி

தென் ஆப்பிரிக்காவில் பாயக்கூடிய இரண்டு பெரிய நதிகளில் ஒன்று பரானா. சுமார் 4880 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லக்கூடிய இந்த நதி அந்நாட்டின் சூழலியல் மற்றும் போக்குவரத்திற்கு பெரும் பங்காற்றுகிறது.

நதிகாங்கோ நதி

ஆப்பிரிக்கா பகுதிகளில் இருந்து புறப்படும் காங்கோ நதி சுமார் 4700 கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்து மொத்த காடுகளையும் உள்ளடக்குகிறது. இந்த ஒரே நதி தான் பூமத்திய ரேகையை இரண்டு முறை பிரிக்கிறது.

ஆமூர் நதி

உலகின் 10 ஆவது பெரிய நதியான ஆமூர் ஹெய்லாங் ஜியாங் 4480 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கக் கூடியது. இந்த நதியின் எல்லை சீனா மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் தொட்டுச் செல்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?