ஜெர்மனியில் விமானிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் லுப்தான்சா நிறுவனம் 800 விமானங்களை ரத்து செய்துள்ளது.
விமானிகள் சங்கமான 'வெரினிகுங் காக்பிட்' ஒரு நாள் முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தது. ஊதிய உயர்வுக்காக விமானிகளின் திட்டமிட்ட வேலைநிறுத்ததை தொடர்ந்து ஜெர்மெனியின் லுஃப்தான்சா சுமார் 800 விமானங்கள் ரத்து செய்யப்படும் என்று கூறியது.
கோடை விடுமுறையின் முடிவில் சொந்த ஊர்களுக்கு திரும்பும் பல பயணிகளை இந்த அறிவிப்பால் பாதிக்கப்பட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
விமான நிறுவனத்தின் பட்ஜெட் கேரியர் யூரோவிங்ஸ் பாதிக்கப்படாது என்று கூறினாலும் லுஃப்தான்சாவின் முந்தைய சலுகையை மேம்படுத்தத் தவறியதாக யூனியன் வெரினிகுங் காக்பிட் குற்றம் சாட்டிய நிலையில் நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் தொடங்கியது.
இதனால் விமானிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 5,000க்கும் மேற்பட்ட விமானிகளுக்கு இந்த ஆண்டு 5.5 சதவீத ஊதிய உயர்வை உயர்த்தி வழங்க வேண்டும் என்று விமானிகள் சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
இதனை தொடர்ந்து ஜெர்மன் விமான நிறுவனமான லுப்தான்சா இன்று பயணிகள் மற்றும் சரக்கு விமானங்கள் உட்பட 800 விமானங்களை ரத்து செய்துள்ளது.
இதனால் கிட்டத்தட்ட 1,30,000 பயணிகள் பாதிப்படைவார்கள் என்று கூறப்படுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust