Dog Canva
உலகம்

போதையில் நாயை கடித்த ஆசாமி, போலீசாரை தாக்கிய பெண் - ஓர் வினோத சம்பவம்!

ஒரு இளைஞர் காவல் துறையினருடன் அழைத்துவரப்பட்டிருந்த நாயை கடித்துள்ளார். அதிர்ஷ்டவசமாக அந்த நாய்க்கு எந்த விதமான காயங்களும் ஏற்படவில்லை. பத்திரமாக மீட்கப்பட்டது.

Keerthanaa R

கைது செய்ய வந்த போலீசாரிடம் தகராறு செய்து, போலீஸ் நாயை கடித்துள்ளார் ஜெர்மனியை சேர்ந்த நபர் ஒருவர்.

ஜின்செய்ம் குஸ்தாவ்ஸ்பர்க் என்ற இடத்தில் நள்ளிரவில் மூவர் சண்டையிட்டுக் கொண்டிருப்பதாகவும், அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்யவேண்டும் எனக் கூறி பொதுமக்கள் ஜெர்மனி காவல் துறையினருக்கு புகாரளித்திருந்தனர்.

பிரச்னையில் ஈடுப்பட்டவர்களில் இருவர் 29 வயது ஆண்கள், மற்றும் ஒருவர் 35 வயது மதிக்கத்தக்க பெண். குறிப்பிடப்பட்ட இடத்திற்கு விரைந்த போலீசார் மூவரையும் தடுத்து சண்டையை நிறுத்த முயற்ச்சித்துள்ளனர். ஆனால் அவர்கள் மூவரையும் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும், ஆக்கிரோஷமாக நடந்துகொண்டதாகவும் தெரிவித்தனர்.

நீண்ட நேரத்திற்கு பிறகு ஒருவரை மட்டுமே கட்டுக்குள் கொண்டுவர இயன்றது என தெரிவித்த காவல் துறையினர், அவரையும் பல காவலர்கள் இணைந்தே தடுத்து நிறுத்த முடிந்தது என தெரிவித்தனர்.

Dog

இந்நிலையில், பொது மக்களுக்கு இடையூறு விளைவித்ததால் அவர்களை கைது செய்தனர். அப்போது ஒரு இளைஞர் காவல் துறையினருடன் அழைத்துவரப்பட்டிருந்த நாயை கடித்துள்ளார். அதிர்ஷ்டவசமாக அந்த நாய்க்கு எந்த விதமான காயங்களும் ஏற்படவில்லை. பத்திரமாக மீட்கப்பட்டது.

மற்றொரு புறம், தகராறில் ஈடுப்பட்டிருந்த பெண், ஒரு காவலரை முகத்தில் ஓங்கி குத்தியதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மதுபோதையில் மூவரும் தகராறில் ஈடுப்பட்டதால், அவர்களது போதை தெளியும் வரை காவல் துறையினர் அவர்களை சிறையில் அடைத்தனர்.

மூவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?