harry matadeen Twitter
உலகம்

பல ஆண்டுகளாக சிறுநீரைக் குடித்து உயிர் வாழும் மனிதர் - காரணம் என்ன?

இந்த பழக்கம் தன்னை 10 வயது இளமையாகக் காட்டுவதாகவும், தேவைப்பட்டால் சிறுநீரை முகத்தில் மாய்ஸ்சரைசராக மசாஜ் செய்யப் பயன்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Priyadharshini R

உலகில் அன்றாடம் ஏதாவது ஒரு விசித்திரமான சம்பவங்கள் நடந்துகொண்டு தான் இருக்கிறது. அதிலும், விசித்திரமான பழக்கங்களால் பாதிக்கப்படும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

அந்தவகையில் ஒரு நபர் தனது சொந்த சிறுநீரைக் கடந்த 6 ஆண்டுகளாகக் குடித்து வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா.? Harry Matadeen என்பவர் கடந்த 6 ஆண்டுகளாக சொந்த சிறுநீரைக் குடிக்கும் பழக்கம் உடையவராக உள்ளார்.

ஒரு நாளுக்குச் சராசரியாக 200 மில்லிலிட்டர் சிறுநீரைக் குடிப்பதாகக் கூறப்படுகிறது. அப்படியானால் அவரின் உடலில் பெரும்பாலும் சிறுநீர் இருக்கும் என்பது நிதர்சன உண்மை.

harry matadeen

சிறுநீர் குடிக்கக் காரணம்

சைவ உணவு உண்பவரான ஹாரி, தனது சிறுநீரைக் குடிப்பதன் மூலம் மனக் கவலை இருந்து தன்னை குணப்படுத்திக் கொள்வதாகவும், மனச்சோர்வு நீக்கி ஒரு புதிய அமைதி கிடைக்கும் என்கிறார். இந்த பழக்கம் தன்னை 10 வயது இளமையாகக் காட்டுவதாகவும், தேவைப்பட்டால் சிறுநீரை முகத்தில் மாய்ஸ்சரைசராக மசாஜ் செய்யப் பயன்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தோல் இளமையாகவும், மென்மையாகவும், பளபளப்பாகவும் வைக்க சிறுநீர் பேருதவியாக உள்ளது என்கிறார் ஹாரி.

குடும்பம் எதிர்ப்பு

முதலில் சிறுநீர் குடிக்க ஆரம்பித்த போது அவரது குடும்பம் எதிர்த்தாக அவர் தெரிவித்தார். இந்த பழக்கம் ஹாரியிடம் வந்த போதிலிருந்து அவரது சகோதரி அவரிடம் பேசுவதில்லை என்று கூறினார்.

urine bottle

சிறுநீர் குடிப்பது தவறு

இப்படி பலர் சிறுநீர் குடிப்பது ஆரோக்கியமானது என்று கூறினாலும், இவை ஆரோக்கியமற்றவை உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உடலிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவுநீரான சிறுநீர் மீண்டும் உடலுக்குள் அனுப்புவது ஆரோக்கியமற்றவை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?