swimming pool Twitter
உலகம்

நீச்சல் குளத்தில் ஏற்பட்ட திடீர் குழியில் சிக்கி இளைஞர் பலி - எங்கே ?

இந்த சம்பவம் தொடர்பாக விருந்து நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தின் உரிமையாளர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Priyadharshini R

எதிர்பாராத சம்பவங்களால் உயிரிழப்புகள் நிகழக்கூடும். சாதாரணமாக ஒரு மனிதன் பாட்டு பாடும் போது, நடந்து செல்லும் போது, ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது என எதிர்பாராத நேரத்தில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

அந்த வகையில் நீச்சல் குளத்தில் இறங்கி குளித்து கொண்டிருந்த இளைஞர் திடீரென ஏற்பட்ட பெரிய குழியில் சிக்கி உயிரிழந்தார்.

இஸ்ரேலின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கர்மி யோசப் நகரில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விருந்தினர்கள் அங்கிருந்த நீச்சல் குளத்தில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது நீச்சல் குளத்தின் அடியில் திடீரென ஒரு பெரிய குழி உருவானது.

நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்த 2 பேர் அங்கு குழிக்குள் விழுந்தனர். ஒருவர் மட்டும் எப்படியோ போராடி மேலே வந்துவிட்டார். மற்றொருவர் குழிக்குள் சிக்கி மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரின் உடல் 43 அடி ஆழத்தில் இருந்து மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விருந்து நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தின் உரிமையாளர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?