30 அடி ஆழம், 100 நாட்கள்: தண்ணீருக்கடியில் வாழும் முன்னாள் கடற்படை வீரர் - என்ன காரணம்? இன்ஸ்டாகிராம்
உலகம்

30 அடி ஆழம், 100 நாட்கள்: தண்ணீருக்கடியில் வாழும் முன்னாள் கடற்படை வீரர் - என்ன காரணம்?

தனது உயிரியல் ஆராய்ச்சி ஒன்றிற்காக மூன்று மாதக் காலம் தண்ணீரில் வாழ முடிவு செய்துள்ளார். 30 அடி ஆழத்தில் 100 நாட்களுக்கு இவர் இருக்கப்போகிறார்

Keerthanaa R

நீண்ட நாட்களுக்கு தண்ணீருக்கு அடியில் வாழ்வதால் அது மனித உடலை எப்படி பாதிக்கிறது என்பதை அறிந்துகொள்ள 100 நாட்கள் தண்ணீருக்கடியில் வாழ திட்டமிட்டுள்ளார் ஜோ டிட்டூரி என்கிற நபர்.

ஜோ டிட்டூரி சவுத் என்பவர் ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் பேராசியராக இருக்கிறார். அமெரிக்காவின் கடற்படையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் தனது உயிரியல் ஆராய்ச்சி ஒன்றிற்காக மூன்று மாதக் காலம் தண்ணீரில் வாழ முடிவு செய்துள்ளார். 30 அடி ஆழத்தில் 100 நாட்களுக்கு இவர் இருக்கப்போகிறார்

கடல்வாழ் உயிரினங்களை, சுற்றுச்சூழலை மீட்டெடுப்பதற்கு புதிய வழிகளை கண்டுபிடிக்கும் சோதனை முயற்சியில் டிட்டூரி இருப்பதாக அவர் பணியாற்றும் பல்கலை நிர்வாகம் கூறியுள்ளது.

மக்களுக்கு நோய்த் தொற்றுகள் ஏற்படுவதை தவிர்க்க மருத்துவ ரீதியிலான தொழில்நுட்பம் ஒன்றினை பரிசோதித்து பார்க்கவுள்ளதாகவும் டிட்டூரி கூறியுள்ளார்.

விண்வெளிக்கு பயணிக்கும் பல்வேறு மிஷன்களை மனிதர்கள் மேற்கொள்வதால், அதிக அழுத்தமுள்ள, மனிதர்கள் வாழ தகுதியல்லாத இடங்களில் இருக்க நேரிட்டால், அந்த சூழ்நிலையை எதிர்கொள்ள மனிதர்களின் உடல் பழக என்ன செய்ய வேண்டும் என்பதை அறியவும் இந்த சோதனையை அவர் கையில் எடுத்திருக்கிறார். இதுவும் விண்வெளிக்கு பயணிப்பதும் கிட்ட தட்ட ஒரே மாதிரியான அனுபவம் தான் என்கிறார் ஜோ டிட்டூரி

இந்த முயற்சிக்கு “நெப்டியூன் 100” எனப் பெயரிட்டுள்ளார். இந்த சோதனை முயற்சியை அவர் மார்ச் 1ஆம் தேதி தொடங்கினார். ஜூன் மாதம் அவரது இந்த எக்ஸ்பெரிமெண்ட் நிறைவடையும் நிலையில், நீண்ட நாட்களுக்கு தண்ணீருக்குள் வாழ்ந்த நபர் என்ற சாதனையை படைப்பார்.

இவரை கண்காணிக்க உளவியலாளர் மற்றும் மனநல மருத்துவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டிட்டூரி நீருக்கடியில் இருந்தபடியே தனது மாணவர்களுக்கு பாடங்கள் நடத்துவதும், ஆராய்ச்சிக்காக வரும் கடல் ஆய்வாளர்களுக்கு உதவுவது நேர்காணல்களுக்கு பேட்டிகள் அளித்தும் வருகிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?