"நீங்கள் இறக்க போகிறீர்கள்" மருத்துவர்கள் சொன்னதை பொய்யாக்க 165 குறைத்த மனிதர் - எப்படி?  twitter
உலகம்

"மரணிக்க போகிறீர்கள்" மருத்துவர்கள் கூற்றை பொய்யாக்க 165 கிலோ எடை குறைத்தவர்- எப்படி?

பள்ளியில் படிக்கும் போதே 136 கிலோ இருந்தாராம். மனச்சோர்வு காரணமாகவே அதிகமாக சாப்பிட்டு அதுவே உடல்பருமனுக்கு வழிவகுத்துள்ளது. 2019ம் ஆண்டு 300 கிலோ இருந்த இவர், விரைவில் மரணித்துவிடுவார் என மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

Antony Ajay R

அமெரிக்காவின் மிசிசிபியைச் சேர்ந்த ஒருவர் எப்போது வேண்டுமானாலும் மரணிக்கலாம் என மருத்துவர்கள் 4 ஆண்டுகளுக்கு முன்னர் கூறியிருக்கின்றனர்.

300 கிலோ எடை இருந்த அந்த நபர் தனது பருமன் காரணமாக மரணிக்க விரும்பவில்லை.

கடுமையாக தனது உடல் எடையை குறைக்க முயன்றவர் 165 கிலோ எடையைக் குறித்து புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார்.

நிக்கோலஸ் க்ராஃப்ட் என்ற 42 வயது நபர் தான் இந்த நிலையையைக் கடந்துவந்தது. இவருக்கு சிறுவயது முதலே உடல் பருமன் பிரச்னை இருந்துவந்திருக்கிறது.

பள்ளியில் படிக்கும் போதே 136 கிலோ இருந்தாராம். மனச்சோர்வு காரணமாகவே அதிகமாக சாப்பிட்டு அதுவே உடல்பருமனுக்கு வழிவகுத்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு உடல் எடையைக் குறைக்கத்தொடங்கிய முதல் மாதத்தில் உணவுக்கட்டுப்பாடு மூலம் 18 கிலோ குறைத்திருக்கிறார்.

அதிக உடல் எடையால் இவருக்கு உடல் வலி, மூட்டு வலி மற்று மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. சாதாரண வாகனங்களில் இவரால் செல்ல முடியவில்லை. எந்த விழாக்களிலும் பங்கேற்க முடியவில்லை.

"நான் என்னுடைய உடல் எடையைக் குறைக்க எதாவது செய்யவில்லை என்றால் இன்னும் 3 முதல் 5 ஆண்டுகளில் இறந்துவிடுவேன் என மருத்துவர்கள் என்னிடம் தெரிவித்தனர்" என்று ஊடகங்களில் கூறியுள்ளார் நிக்கோலஸ்.

அவர் உடல்எடையைக் குறைக்க சிறப்பான டயட் எல்லாம் இல்லையாம், தினசரி கலோரிகள் சேர்ப்பதை மட்டுமே குறைத்தாராம்.

நிக்கோலஸ் உடல் எடையைக் குறைக்க அவரது பாட்டி மிகவும் உறுதுணையாக இருந்ததாக தெரிவித்துள்ளார். இப்போது தன்னால் சுவாசிக்க முடிவதாகவும் நினைக்கும் இடத்துக்கு பயணிக்க முடிவதாகவும் பெருமிதம் கொள்கிறார் நிக்கோலஸ்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?