Man Twitter
உலகம்

திருமண வரவேற்பில் தீயை பற்ற வைத்த நபர் - மதுபோதையில் கையால் அணைக்க முயற்சி | video

Priyadharshini R

ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த விருந்தினர் ஒருவர் குடிபோதையில் திருமண அரங்கினை எரித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாகத் திருமண நிகழ்ச்சி என்றாலே வேடிக்கையும் விளையாட்டும் அதிகமாகவே இருக்கும். அதே விளையாட்டுத் தனம் சில சமயங்களில் விபரீதத்தில் முடியும்.

அந்த வகையில் வெளிநாட்டுத் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த விருந்தினர் ஒருவர் அதிக குடிபோதையில் திருமண அரங்கினை எரித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோ பதிவில் நீண்ட தாடியுடன் கோட் சூட் அணிந்த அந்த நபர்,கையில் மத்தாப்பினை பிடித்தபடி1992 ஆம் ஆண்டு ஹிட்டான 'ஐயாம் டு செக்ஸி' பாடலுக்கு அருகிலிருந்த பெண்ணோடு நடனம் ஆடுகிறார்.

அப்போது கையிலிருந்த மத்தாப்பு, பின்னால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மரப்பீப்பாயில் விழுந்து தீப்பற்றியது.

இவர்களது நடனத்தைப் படம் பிடிக்கும் நபரும் திருமணவிழாவிற்கு வந்திருந்த விருந்தினர்களும் நெருப்பு.. நெருப்பு என்று கத்தி, அலறியடித்து ஓடினர். அந்த நபர் தீயை கையாலே அணைக்க முயற்சி செய்கிறார்.

அவருடன் நடனமாடிய பெண்ணும் அரங்கிலிருந்த திரைச்சீலையினை எடுத்து வந்து எரிந்த தீயினை அணைக்கின்றார்.

party

இதனால் எரிய இருந்த அரங்கம் தப்பியது, ஆனால் அந்த போதை ஆசாமியோ எரியும் நெருப்பின் மீது நடனமாடியபடி வருகின்றார்.

இந்த வீடியோவினை தாமஸ் என்ற நபர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, எனது திருமணத்தில் இது போன்றுதான் குடித்திருப்பேன் என்று பதிவிட, அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். இணையாவசிகளும் பல்வேறு நகைச்சுவையான கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?