Mark Zuckerberg Facebook
உலகம்

சர்ஃபிங் செய்வதன் மூலம் கெட்ட செய்திகளிலிருந்து தப்பிக்க முயல்கிறேன் - மார்க் சக்கர்பெர்க்

தினசரி நாளை தொடங்கும் போது டன் கணக்கிலான புதிய செய்திகள் அவரை முகத்தில் குத்துவது போன்ற மோசமான உணர்வைத் தருவதாக தெரிவித்திருக்கிறார் மார்க். இந்த நெகடிவிட்டியிலிருந்து எப்படித் தப்பிக்கிறார் மார்க்?

Antony Ajay R

பேஸ்புக் நிறுவனத்தின் தலைவரான மர்க் சக்கர் பெர்க் தினசரி கெட்ட செய்திகளிலிருந்து தன் மனதைத் தப்பிக்கச் செய்ய அவர் பயன்படுத்தும் இரகசிய வழிமுறையை சமீபத்திய நேர்காணலில் விளக்கினார்.


காலை எழுந்தவுடன் நாம் விழிப்பது பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் முகத்தில் தான் ஆனால் இவற்றின் உரிமையாளரான மார்க் சக்கர் பெர்க் காலை பொழுதுகள் எப்படிக் கழிகின்றன எனத் தெரியுமா? "அசௌகரியமான சூழலிலும் நீங்கள் சௌகரியமாக இருக்கிறீர்களே?" என நெறியாளர் ஃபெர்ரிஸ் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார் மார்க்.


மார்க் காலையில் எழுந்தவுடன் அவரது மெய்லை தான் செக் செய்வாராம். அதில் மெட்டா நிறுவனத்தில் அன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிகழ்வுகளையும் உலக நடத்தைகளையும் அறிந்துகொள்வாராம். சமீப காலத்தில் உலகம் முழுவதுமே நெகடிவ் செய்திகள் தான் அதிகரித்திருக்கின்றன. கொரோனா, போர்கள், பஞ்சம் பற்றிய செய்திகள் மிகவும் மன உளைச்சலைத் தருவதாக இருக்கின்றன. இது போன்றே மார்க்கும் தினசரி காலைகளில் கணிசமான நெகடிவ் செய்திகளைப் பெறுகிறாராம்.

சர்ஃபிங் செய்யும் Mark Zuckerberg

தினசரி நாளை தொடங்கும் போது டன் கணக்கிலான புதிய செய்திகள் அவரை முகத்தில் குத்துவது போன்ற மோசமான உணர்வைத் தருவதாக தெரிவித்திருக்கிறார் மார்க்.

அந்த மோசமான உணர்விலிருந்து தப்பிக்கொள்ள சர்ஃபிங் செய்வாராம் மார்க். “நீங்கள் சர்ஃபிங் செய்யும் போது உங்களால் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியது” என்கிறார் மார்க். தண்ணீரின் மேலே போர்டில் இருப்பதற்கு முழு கவனத்தையும் செலுத்த வேண்டியது அவசியம். இதனால் மற்ற விஷயங்களைப் புறம் தள்ள முடியும்” எனவும் மார்க் தெரிவித்துள்ளார்.

இதன் பிறகு அந்த நாளை தொடங்கும் போது அந்த நாளில் நடக்கும் எல்லாவற்றையும் சமாளிக்க முடியும் எனவும் மார்க் தெரிவித்துள்ளார். மார்க் சக்கர் பெர்க் தன் மனதை ரிலாக்ஸ் செய்வதற்கு ஏற்ற பல அழகிய இடங்களை வாங்கி வைத்திருக்கிறார்.

சர்ஃபிங் நமக்கு பரிட்சயம் அற்றது தான் ஆனால் நாமும் நம் மனதை நெகட்டிவிட்டியில் இருந்து புறந்தள்ள நடைபயிற்சி, விளையாட்டு என எதாவது ஒன்ப்றில் ஈடுபட வேண்டும்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?