டெலிகாம் அலுவலக கட்டடம் Twitter
உலகம்

சீனா : வானளாவிய கட்டடத்தில் பற்றியத் தீ - திக் திக் காட்சிகள் |Video

சீன அரசின் டெலிகாம் அலுவலக கட்டடமான இது 42 மாடிகளைக் கொண்டிருக்கிருக்கிறது. இதன் வெளிப்புறச் சுவரில் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. சாங்ஷா நகரில் சுமார் ஒரு கோடி மக்கள் வசிக்கின்றனர். தீயினால் ஏற்பட்ட கரும்புகை காரணமாக இவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Antony Ajay R

சீனாவின் சாங்ஷா நகரத்தில் உள்ள வானளாவியன் கட்டடம் ஒன்று தீப்பற்றி எரியும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீன அரசின் டெலிகாம் அலுவலக கட்டடமான இது 42 மாடிகளைக் கொண்டிருக்கிருக்கிறது. இதன் வெளிப்புறச் சுவரில் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. சாங்ஷா நகரில் சுமார் ஒரு கோடி மக்கள் வசிக்கின்றனர். தீயினால் ஏற்பட்ட கரும்புகை காரணமாக இவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டடத்தில் இருந்தவர்களின் உயிரிழப்புகள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. தீ குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனால் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. கட்டடத்தின் வெளிப்புற சுவர் முழுவதுமாக கருகியிருப்பதை வீடியோவில் பார்க்க முடிகிறது.

சாங்ஷா நகரம் சீனாவின் தெற்கு மாகாணமான ஹூனானின் தலைநகரம் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?