லண்டனில் அமைக்கப்படவுள்ள ஜகன்நாத் கோவிலுக்கு ரூ.250 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார் தொழிலதிபர் பிஸ்வந்த் பட்நாயக்.
ஒடிசாவை சேர்ந்த தொழிலதிபரான பிஸ்வந்த், ஒரு சமூக சேவகரும் கூட. இவர் வழங்கியுள்ள இந்த 250 கோடி ரூபாய் தானம் என்பது ஒரு இந்தியர் வெளிநாட்டு கோவிலுக்கு வழங்கிய அதிகபட்ச நன்கொடையாகும்.
கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று அக்ஷய திரிதியையை முன்னிட்டு இங்கிலாந்தில் முதல் ஜகன்நாத் மாநாடு நடைப்பெற்றது. இந்த மாநாட்டின்போது தான் இந்திய வம்சாவளி தொழிலதிபரான பிஸ்வந்த் பட்நாயக் இந்த நன்கொடை வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.
இதன் முதற்கட்டமாக ஏற்கனவே கோவில் நிர்வாகத்திடம் ரூ.70 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை வைத்து கோவில் எழுப்ப தேவையான சுமார் 15 ஏக்கர் நிலத்தை வாங்கவுள்ளது கோவில் நிர்வாகம்.
ஒடிசாவை சேர்ந்தவர் பிஸ்வந்த் பட்நாயக். ஃபின்னெஸ்ட் குழுமத்தின் தலைவரும் நிறுவனரும் ஆவார்.
பேங்கர் ஆக இருந்து தொழிலதிபராக மாறியவர். தற்போது யுனைட்டட் கிங்டமில் வசித்து வருகிறார்.
தகவல்களின்படி எகனாமிக்ஸ், எம்பிஏ, எல் எல் பி உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்துள்ளார்.
வங்கி துறையில் பணியாற்றிய அனுபவங்களை வைத்து நிதி நிறுவனங்கள் பலவற்றில் பணியாற்றினார் பிஸ்வந்த்.
ஆனால் தனது வாழ்க்கை ஒரே திசையில் சென்றுக்கொண்டிருப்பதாக உணர்ந்தவர், அதனை மாற்ற முடிவெடுத்தார். 2009ஆம் ஆண்டு சொந்த தொழில் தொடங்கும் முடிவெடுத்தார்.
முதற்கட்டமாக பல சிறிய நிறுவனங்களை திறந்தார். அவற்றில் ஒரு நிறுவனம் பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் பட்டியலிடப்பட்டிருந்தது, மற்றொன்று ரிசர்வ் வங்கியின் உரிமம் பெற்றிருந்தது. 2014 வரை இந்த நிறுவனங்களை தலைமை தாங்கி வந்தார் பிஸ்வந்த்.
அதன் பிறகு, சுகாதாரம், ஃபிண்டெக், சில்லறை விற்பனை ஆகிய துறைகளில் முதலீடு செய்து தனது தொழில்களை அவர் விரிவுப்படுத்தினார். டி என் ஏ தளத்தின் அறிக்கையின்படி துபாயில் அவர் தங்கம் வர்த்தகத்திலும் ஈடுப்பட்டுள்ளார்
ரூ.500 கோடி செலவில், ஹைதராபாத்தில் ev - ஹைட்ரஜன் டிரக் மற்றும் கனரக வாகனங்கள் உற்பத்தி ஆலையை உருவாக்க இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆர்வம் காட்டியதாகவும், இதன் திட்டத்தை விரைவில் அரசிடம் முன்மொழியவுள்ளதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கை கூறியுள்ளது.
பிஸ்வந்த் பட்நாயக் இந்தியாவில் நன்கொடைகள் வழங்குவது தவிர, யுனெஸ்கோவிற்கு பங்களிப்பு செய்கிறார். பிஸ்வந்த் பட்நாயக் தற்போது 500 தாழ்த்தப்பட்ட பெண்களின் கல்விச் செலவுக்கு நிதியுதவி செய்கிறார் என்று டிஎன்ஏ அறிக்கை கூறுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust