kim kardashian NewsSense
உலகம்

Kim Hardashian : கிம் கர்தாஷியனை வீழ்த்திய தமிழக வம்சாவளி ஜெயஶ்ரீ - யார் இவர்?

உலகப் புகழ்பெற்ற மாடல் அழகி மற்றும் தொழிலதிபரான கிம் கர்ஷாஷியனின் சொத்து மதிப்பு 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்தான். ஜெயஶ்ரீயின் சொத்து மதிப்பு 1.9 பில்லியன் டாலர் என்கிறது ஃபோர்ப்ஸ் வலைத்தளம்.

Gautham

'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என ஒரு தமிழ் வரியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள் படித்திருப்பீர்கள். அந்த வரிக்கு உதாரணமாகத் தமிழர்கள் இன்றும் உலகின் பல நாடுகளில் வேலை பார்த்து அல்லது சொந்தத் தொழில் செய்து லாபம் ஈட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

உலக பணக்காரர்கள் பட்டியல், உலகின் ஆகச் சிறந்த நிறுவனங்களில் பட்டியலில் தமிழர்கள் இடம் பிடிக்கவில்லை என ஒரு வருத்தம் இருந்தது.

கடந்த சில ஆண்டுகளாக அந்த வருத்தமும் நீங்கத் தொடங்கியுள்ளது. 2015ஆம் ஆண்டு சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி ஆனார். சென்னையைச் சேர்ந்த முருகவேல் ஜானகிராமனின்

”பாரத் மேட்ரிமோனி” நிறுவனம் இன்று உலகம் முழுக்க தன் வணிகத்தைப் பரப்பியுள்ளது.

Jayshree Ullal

தற்போது, தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட ஜெயஶ்ரீ உல்லால் என்கிற பெண், அமெரிக்காவில் சுயமாக பில்லியனராக உருவெடுத்த பெண்கள் பட்டியலில் 15ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறார்.

உலகப் புகழ்பெற்ற மாடல் அழகி மற்றும் தொழிலதிபரான கிம் கர்ஷாஷியனின் சொத்து மதிப்பு 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்தான். ஜெயஶ்ரீயின் சொத்து மதிப்பு 1.9 பில்லியன் டாலர் என்கிறது ஃபோர்ப்ஸ் வலைத்தளம். தற்போது இந்திய அமெரிக்க பெண்களில் மிகப்பெரிய பணக்காரர் 61 வயதான ஜெயஶ்ரீதான்.

இவர் அரிஸ்டா என்கிற கணினி நெட்வொர்க்கிங் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரியாகக் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். அந்நிறுவனத்தில் இவருக்கு 5 சதவீதப் பங்குகள் இருப்பதாகச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பங்குகளின் மதிப்பீட்டால் தான் ஜெயஶ்ரீ தற்போது பில்லியனர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

Jayshree Ullal

ஜெயஶ்ரீ ஸ்னோஃப்ளேக்ஸ் (Snowflakes) என்கிற கிளவுட் கம்ப்யூட்டிங் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலும் இருக்கிறார்.

தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், லண்டன் நகரத்தில் பிறந்து, டெல்லியில் வளர்ந்தார். ஜீசஸ் மேரி கான்வென்ட் பள்ளியில் தன் பள்ளிப் படிப்பையும், சான் பிரான்சிஸ்கோ மாகாண பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரிகல் பிரிவில் பொறியியல் பட்டமும், சாண்டா கிளாரா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மேலாண்மையில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

இவரது நிர்வாகத் திறமை மற்றும் தொழில்முனைவோர் திறனுக்குச் சான்றாகப் பல பட்டங்களையும் விருதுகளையும் வென்றுள்ளார். 2015ஆம் ஆண்டுக்கான எர்னஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தின் சிறந்த தொழில்முனைவோர் விருது, 2018ஆம் ஆண்டுக்கான பாரோன்ஸ் உலகின் ஆகச் சிறந்த முதன்மைச் செயல் அதிகாரி விருது, 2019ஆம் ஆண்டுக்கான ஃபார்ட்சூன்ஸ் டாப் 20 வியாபாரங்கள் பட்டியலில் இடம் பிடித்தது என அடுக்கிக் கொண்டே போகலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?