Influencer ஆக மாறி மில்லியனர் ஆன கோல்டன் ரிட்ரீவர் நாய் - ஆண்டுக்கு 8 கோடி வருமானமா? Instagram
உலகம்

ஆண்டுக்கு 8 கோடி ரூபாய் சம்பாதிக்கும் 'பணக்கார நாய்’ - எப்படி தெரியுமா?

டக்கருக்கு இன்ஸ்டாகிராமில் கணக்கு இருக்கிறது. இதில், டக்கர் செய்யும் விஷயங்களை அதன் உரிமையாளர் வீடியோவாக எடுத்து போஸ்ட் செய்துள்ளார். அவனிடம் பேசுவது, அதற்கு டக்கரின் ரியாக்‌ஷன், உடன் இருக்கும் மற்றொரு நாயுடன் விளையாடுவதும், தூங்குவது என அவனது சேட்டைகளால் நிறைந்திருக்கிறது அந்த ஐடி

Keerthanaa R

தொழில்நுட்பமும், இன்டெர்னெட்டும் வளர்ச்சி அடைந்ததன் மூலம் பலரது திறமைகள் வெளியாகியுள்ளன.

பல சிங்கர்கள், டான்சர்கள், கன்டென்ட் ரைட்டர்கள் வெளிபட்டனர். சோசியல் மீடியா இன்ஃப்ளூயென்சர் என்கிற புது பதமும் உருவானது, அல்லது நம்மில் பிரபலமடைந்தது.

இந்த சோசியல் மீடியா இன்ஃப்ளூயென்சராக மனிதர்கள் மட்டுமல்ல, நம் செல்ல பிராணிகளும் உருவெடுத்துவிட்டன.

அப்படி இன்ஃப்ளூயென்சராக மாறி ஆண்டுக்கு 8 கோடி ரூபாய் சம்பாதிக்கிறது நாய் ஒன்று.

டக்கர் பட்சைன். இவன் தான் இன்டெர்னெட்டின் செல்லமான நான்கு கால் இன்ஃப்ளூயென்சர். இவனது வயது 5. இவன் கோல்டன் ரிட்ரீவர் இனத்தை சேர்ந்தவன்.

பிரிண்ட்டட் பெட் மெமரீஸ் என்கிற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி, டக்கர் தான் நம்பர் 1 டாக் இன்ஃப்ளூயென்சர்.

டக்கருக்கு இன்ஸ்டாகிராமில் கணக்கு இருக்கிறது. இதில், டக்கர் செய்யும் விஷயங்களை அதன் உரிமையாளர் வீடியோவாக எடுத்து போஸ்ட் செய்துள்ளார். அவனிடம் பேசுவது, அதற்கு டக்கரின் ரியாக்‌ஷன், உடன் இருக்கும் மற்றொரு நாயுடன் விளையாடுவதும், தூங்குவது என அவனது சேட்டைகளால் நிறைந்திருக்கிறது அந்த ஐடி.

2 வயது முதல், இவனது கன்டென்ட்களுக்கு ஸ்பான்சர்கள் வருகிறது. அந்த விளம்பரங்கள் மூலம் சம்பாதிக்க தொடங்கினான் டக்கர்.

நியூ யார்க் போஸ்ட்டிடம் டக்கரின் உரிமையாளர் கர்ட்னி பட்சை கூறுகையில், ”ஒரு 30 நிமிட யூடியூப் வீடியோவுக்கு 33 முதல் 50 லட்சம் வரை வருமானம் வருகிறது. இன்ஸ்டாவில் 16 லட்சம் ரூபாய் வரை இருக்கிறது வருமானம்” என்றார்.

கர்ட்னி வீடுகளை சுத்தம் செய்யும் நபராக பணியாற்றி வந்தார், அவரது கணவர் மைக் ஒரு சிவில் இஞ்சினியர். கடந்த ஜூன் 2018ஆம் ஆண்டு 8 மாதங்களே ஆகியிருக்கும்போது டக்கரை இந்த தம்பதியினர் தத்தெடுத்தனர்.

அப்போதே இவனுக்கு ஒரு இன்ஸ்டாகிரம் கணக்கையும் உருவாக்கினர். டக்கரின் வீடியோ ஒன்று அப்போது திடீரென வைரலானது. அப்போது முதல் இவனது வீடியோக்களை பதிவிட ஆரம்பித்தனர்.

6 மாதங்கள் ஆகும்போது, டக்கருக்கு 60,000 பின்தொடர்பவர்கள் வந்துவிட்டனர். தற்போது டக்கருக்கு 25 மில்லியன் ஃபாலோவர்கள் உள்ளனர்.

இவர்கள் டக்கர் மற்றும் அவனது மகன் டாட் ஆகிய இரண்டு நாய்களையும் கவனித்துக்கொள்வதற்காகவே அவர்களது வேலையை விட்டனர்.

நீங்களும் டக்கரின் வீடியோக்களை பார்த்து ரசிக்கவேண்டும் என்றால், இன்ஸ்டாவில் அவனை ஃபாலோ செய்யலாம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?