Mexico City: தண்ணீர் இன்றி திண்டாடும் 2 கோடி மக்கள் - என்ன காரணம்? Twitter
உலகம்

Mexico City: தண்ணீர் இன்றி திண்டாடும் 2 கோடி மக்கள் - என்ன காரணம்?

மழைக்காலம் வந்து தண்ணீர் கிடைக்க இன்னும் 4 மாதக்களை காத்திருக்க வேண்டும். ஆனால் அதற்குள் மெக்சிகோவில் தண்ணீர் இல்லாமல் தீர்ந்து போகவும் வாய்ப்பு இருக்கிறது.

Antony Ajay R

மெக்சிகோ உலகின் மிகப் பெரிய நகரங்களில் ஒன்று. 2.2 கோடி மக்கள் வாழும் மெக்சிகோவில் சில நாட்களாக தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. புவியியல் சவால்கள், ஒழுங்கற்ற நகர்ப்புற விரிவாக்கம் மற்றும் காலநிலை மாற்ற எனப் பிரச்னைகள் வலைபின்னல் போல இணைந்து நகரின் தொண்டையை நெறுக்கத் தொடங்கியிருக்கின்றன.

சில ஆண்டுகளாக மழை இல்லாதது, நீண்ட வறட்சி அதிக வெப்பநிலை, அதிக தண்ணீர் செலவுசெய்யப்படும் பயன்பாட்டு முறை ஆகிய காரணங்களால் இந்த பிரச்னை மேலும் தீவிரமடைந்துள்ளது. அதிகாரிகள் நிலைமையைச் சமாளிக்க புதிய வழிகளை ஆராய்ந்து வருகின்றனர்.

மெக்சிகோ நகரம் கடல் மட்டத்தில் இருந்து 7,000 அடி உயரத்தில் ஏரிக்கரையில் அமைக்கப்பட்டது. இது நில அதிர்வுகள் ஏற்படக் கூடியது மற்றும் காலநிலை மாற்றத்தில் எளிதாக பாதிக்கப்படக் கூடியது.

மெக்சிகோவில் களிமண் தரை கான்கிரீட்டால் சூழப்பட்டுள்ளது. ஆறுகள் ரோடுகளாகிவிட்டன. தண்ணீர் தேக்கி வைக்கும் இடமில்லாத அளவு தவறான நகரமயமாக்கலால் பாதிப்படைந்துள்ளது மெக்சிகோ நகரம். அதன் இயற்கை அமைப்பு முற்றிலும் மாறியதனால் தண்ணீர் பிரச்னை இப்போதைக்கு தீர்க்கக்கூடியதாக இல்லை. மழைக்காலம் வந்து தண்ணீர் கிடைக்க இன்னும் 4 மாதக்களை காத்திருக்க வேண்டும். ஆனால் அதற்குள் மெக்சிகோவில் தண்ணீர் இல்லாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?