மெக்சிகோ : 1000 ஆண்டு பழமையான ஏலியன் சடலம் - காங்கிரஸில் காட்டப்பட்டதன் பின்னணி என்ன?

ஏலியன் ஆர்வலரும் பத்திரிகையாளருமான ஜேமி மௌசன் என்பவர் இந்த நிகழ்வை தலைமைத் தாங்கினார். இவர், "இந்த சடலங்களின் டி.என்.ஏ மூன்றில் ஒரு பங்கு நமக்குத் தெரியாதது" என்றும், இவை பூமியின் பரிமாணத்தில் உருவாகாத உயிரினம்" என்றும் கூறியுள்ளார்.
மெக்சிகோ : 1000 ஆண்டு பழமையான ஏலியன் சடலம் - காங்கிரஸில் காட்டப்பட்டதன் பின்னணி என்ன?
மெக்சிகோ : 1000 ஆண்டு பழமையான ஏலியன் சடலம் - காங்கிரஸில் காட்டப்பட்டதன் பின்னணி என்ன?Twitter

மனிதரல்லாத வேற்றுகிரகவாசிகள் என 2 சடலங்கள் மெக்சிகன் சட்டமன்றத்தில் காட்சிப்படுத்தப்பட்ட செய்தி வைரலாக பரவி வருகிறது.

கண்ணாடி பெட்டில் வைத்து காட்டப்பட்ட மம்மி போன்ற அந்த உடல்கள் UFO, ஏலியன் ஆர்வலர்களைக் கிளறியுள்ளது. இந்த உடல்கள் பெருவின் குஸ்கோ நகரில் கண்டறியப்பட்டது என்றும் 1000 ஆண்டுகள் பழமையானது என்றும் அரசியல்வாதிகள் கூறியுள்ளனர்.

ஏலியன் ஆர்வலரும் பத்திரிகையாளருமான ஜேமி மௌசன் என்பவர் இந்த நிகழ்வை தலைமைத் தாங்கினார். இவர், "இந்த சடலங்களின் டி.என்.ஏ மூன்றில் ஒரு பங்கு நமக்குத் தெரியாதது" என்றும், இவை பூமியின் பரிமாணத்தில் உருவாகாத உயிரினம்” என்றும் கூறியுள்ளார்.

இந்த சட்டமன்ற கூட்டத்தில் மெக்சிக அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இவை பறக்கும் தட்டு விபத்தில் வந்தவையாக இருக்காது என்றும் பாசி (diatom) சுரங்கங்களில் இறந்து புதைப்படிவமாக உருவாகியிருக்கலாம் என்றும் ஜேமி மௌசன் தெரிவித்துள்ளார்.

இதேப்போல 2015ம் ஆண்டு பெருவின் நாஸ்கா அருகில் மம்மி போன்ற ஏலியன் உடலை ஜேமி மௌசன் காட்டினார். ஆனால் அப்போது அது ஒரு மனிதக் குழந்தை என பின்னாளில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த முறை இந்த சடலங்கள் மெக்ஸிகோவின் தன்னாட்சி தேசிய பல்கலைக்கழகத்தில் சோதிக்கப்பட்டவை என ஜேமி கூறியுள்ளார். இதன் டி.என்.ஏ தகவல்களைப் பெற கதிரியக்க கார்பன் முறையை பின்பற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

மெக்சிகோ : 1000 ஆண்டு பழமையான ஏலியன் சடலம் - காங்கிரஸில் காட்டப்பட்டதன் பின்னணி என்ன?
Alien : மனிதக்குலத்தை வேற்றுகிரகவாசிகள் ஏன் பார்வையிடவில்லை?

மெக்சிகன் சட்டமன்றத்தின் உறுப்பினர்கள் இது குறித்து தீவிரமாக சிந்திக்கவும் கவலையடையவும் வேண்டியிருக்கிறது. தொடர்ந்து ஏலியன்கள் பற்றியான உரையாடல்களை நிகழ்த்த வேண்டும்.

கடந்த ஜூலை மாதம், சில UFOக்கள் மற்றும் UFA (அடையாளம் தெரியாத முரண்பாடான நிகழ்வுகள்) பற்றி தெரிவித்த அமெரிக்க நேவியின் முன்னாள் விமானி ரியான் கிரேவ்ஸ் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.

மெக்சிகோ : 1000 ஆண்டு பழமையான ஏலியன் சடலம் - காங்கிரஸில் காட்டப்பட்டதன் பின்னணி என்ன?
துருக்கி: ஏலியன்களா? அடுத்த பிரபஞ்சத்துக்கு செல்லும் வழியா? வானில் தோன்றிய UFO மேகங்கள்!

பூமிக்கு வெளியே இருக்கும் பிரபஞ்சம் குறித்து மனிதர்கள் அறிந்திருப்பது மிகக் குறைவே. முழுவதுமாக அண்டசராசரத்தை அறிவியல் ரீதியாக நம்மால் அறிய முடியாமலும் போகலாம்.

ஆனால் நம்மைப் போன்ற அறிவு படைத்த உயிர்கள் வாழ்ந்தால் நிச்சயமாக தொடர்பு ஏற்பட்டிருக்கலாம் தானே? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

மெக்சிகோ : 1000 ஆண்டு பழமையான ஏலியன் சடலம் - காங்கிரஸில் காட்டப்பட்டதன் பின்னணி என்ன?
Aliens : 100 ஆண்டுகளாய் வேற்றுகிரகவாசிகளுடன் பேச முயலும் மனித குலம் - முழுமையான வரலாறு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com