அழகிப் போட்டியில் வென்ற பசு மாடு Twitter
உலகம்

"அவள் உலக அழகியே" பசுக்களுக்கு அழகி போட்டி நடத்திய மக்கள் - எங்கே?

Keerthanaa R

அழகுப்போட்டிகள் பொதுவாக ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்காக நடத்தப்படும். சில நாடுகளில் அழகுப்போட்டிகள் விலங்குகளுக்கும் நடத்தப்படுகின்றன.

அப்படி ரஷ்யாவில் பசு மாடுகளுக்கான அழகிப் போட்டிகள் நடத்தப்பட்டது. ரஷ்யாவின் யாகுடியா என்ற இடத்தில் இந்த போட்டி நடந்துள்ளது. இதில் மிச்சியே என்ற பசு பட்டத்தை தட்டிச்சென்றுள்ளது. இந்த போட்டியில் மொத்தம் 25 பசுக்கள் கலந்துகொண்டன. அழகிப் போட்டியில் வென்ற மிச்சியேவுக்கு 40 லிட்டர் பால் கேன் பரிசாக வழங்கப்பட்டது. மிச்சியே யாகுட் ஹியஃபோர்ட் என்ற இரண்டு இனங்களின் கலவை பசுவாகும்.

யாகுடியாவில் இரண்டாவது முறையாக இந்த போட்டிகள் நடைபெறுவதாக டி என் ஏ செய்தி தளம் கூறுகிறது. கடந்த வருடம் நடத்தப்பட்ட போட்டியில் ஊட்டாய் டூட்டாய் என்ற இரட்டைக் காளை மாடுகள் பட்டத்தை வென்றது. இந்த போட்டியில் பங்கெற்ற பசுக்களின் புகைப்படங்கள் ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளன

கேட்பதற்கு சற்று வினோதமாக இருந்தாலும், உலகில் வித்தியாசமான சில விலங்குகளுக்கான அழகுப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் ஆடுகளுக்கான பியூட்டி கான்டெஸ்ட்கள் நடத்தப்படுகின்றன. இது போல புறாக்கள், ஒட்டகச்சிவிங்கிகள், யானை, ஃபால்கன் பறவை, எட்டுக்கால் பூச்சி போன்றவற்றிற்கும் பியூட்டி கான்டெஸ்ட்கள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?