அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலவரையற்ற விடுமுறையை அறிவித்துள்ளது அந்த நிறுவனம்.
வேலைக்கு என்று வந்துவிட்டால், நினைத்த நேரத்தில் விடுமுறை என்பது கிடைக்காது. ஊருக்கே பண்டிகைக்கு லீவு இருக்கும், அப்போது நாம் மட்டும் அலுவலகத்தில் வேலைப்பார்த்துக் கொண்டிருப்போம். இதனால் பல பிளான்களை நாம் மாற்றியமைக்க வேண்டியதாக இருக்கும்.
இதற்கு ஒரு சிறு மாற்றாக, தங்களது நிறுவனத்தின் விடுமுறை கொள்கையை மாற்றியுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.
அமெரிக்காவிலுள்ள மைக்ரோசாப்ட் அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு காலவரையற்ற விடுமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது நிறுவனம். ஏற்கனவே அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு என்று இருக்கும் மற்ற விடுமுறைகளுடன் சேர்த்து இந்த விடுமுறையும் இருக்கும்.
அடுத்த வாரம் முதல் இந்த கொள்கை நடைமுறைக்கு வரும்.
தி வெர்ஜ் செய்தி தளத்தின் அறிக்கையின்படி, இந்த செய்தியை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் chief people officer, கேத்லீன் ஹோகன், மின்னஞ்சல் மூலம் இதனை ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளார்.
Discretionary Time Off policy என்றழைக்கப்படும் இது நிறுவனத்தின் விடுமுறை கொள்கைகளை நவீனமயமாக்குவதற்காக மற்றும் எல்லோருக்கும் ஏதுவாக இருக்க மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறைகளால், அவர்களின் இதர வழக்கமான லீவுகள் பாதிக்கப்படாது. மைக்ரோசாப்ட் ஊழியர்களுக்கு 10 கார்ப்ரேட் லீவுகள் உண்டு. இந்த விடுமுறைகளை எடுக்காதவர்களுக்கு, ஏப்ரல் மாதத்தில் அந்நாட்களுக்கான ஊதியம் வழங்கப்படும்
அமெரிக்காவிலிருந்து வெளியில் இருக்கும் ஊழியர்கள், குறிப்பிட்ட மணி நேரத்திற்கு மட்டும் வேலைப்பார்ப்பவர்களுக்கு இந்த நடைமுறை செல்லுபடியாகாது.
அடுத்த வாரம் முதல் இந்த லீவை ஊழியர்கள் எடுத்துக்கொள்ளலாம், மற்றும் எப்போது திரும்ப நினைக்கிறார்களோ அப்போது நிறுவனத்திற்கு திரும்பலாம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust