Larissa Maximano Twitter
உலகம்

Miss Bumbum: புட்டத்துக்கு லட்சக் கணக்கில் இன்ஷூரன்ஸ் எடுத்த மாடல் அழகி

Gautham

பொதுவாக மனிதர்கள் தங்களின் வாழ்கையில் அசம்பாவிதம் ஏற்பட்டு இறந்துவிட்டால், தங்களின் குடும்பத்தினர் சிரமப்படக் கூடாதென இன்ஷூரன்ஸ் எடுப்பர். அதை லைஃப் இன்ஷூரன்ஸ் என்போம்.


உடல் நலக் குறைபாடு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் சில ஆயிரம் முதல் பல லட்சம் செலவாகும். அது நம் சேமிப்புகளை காலி செய்துவிடும். அம்மருத்துவ செலவுகளைச் சமாளிக்க ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பர். வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் திருட்டு மற்றும் தீ பாதுகாப்புக்கு இன்ஷூரன்ஸ் எடுப்பர்.

இந்த 2022ஆம் ஆண்டுக்கான போட்டியில் லரிசா மேக்ஸிமோனாவும் கலந்து கொள்ளவிருக்கிறார். தன் அயராத பணி காரணமாக அவருடைய பிருட்டம் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, லரிசா தன் பிருட்டத்தை 78,000 பவுண்ட் ஸ்டெர்லிங்குக்கு இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கிறார். இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் 74 லட்சம் ரூபாய்.

"என்னுடைய பிருட்டத்தை அழகாக வைத்திருக்க உடற்பயிற்சி செய்து வருகிறேன். மேலும் அதன் அளவை அதிகரிக்கவும் தேவையான பல விஷயங்களைச் செய்து பராமரித்து வருகிறேன். பிருட்டத்துக்கு தைலம், கிரீம்கள் என பல அழகுசாதனப் பொருட்களையும் பயன்படுத்தி வருகிறேன்" என லரிசா கூறியுள்ளார். என் உடலிலேயே மிக முக்கியமான பாகம் என்னுடைய பிருட்டம் தான். அதை எனது சொத்தாகக் கருதுகிறேன் என்றும் டெய்லி ஸ்டார் பத்திரிகையிடம் கூறியுள்ளார்.

இந்த ஆண்டுக்கான மிஸ் பம்பம் போட்டியில் வெற்றி பெற்றால், தன்னுடைய பிருட்டத்தில் மதிப்பு சுமார் 3 மடங்கு அதிகரிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் லரிசா.


இப்படி பிருட்டத்துக்கு இன்ஷூரன்ஸ் எடுப்பது ஒன்றும் உலகில் புதிய விஷயமல்ல. கடந்த ஆண்டு மிஸ் பம்பம் போட்டியில் வெற்றி பெற்ற நாதி கிஹாரா (Nathy Kihara) தன் பிருட்டத்தை 1.2 மில்லியன் அமெரிக்க டாலருக்கு இன்ஷூரன்ஸ் எடுத்துள்ளார்.

அவ்வளவு ஏன்... உலகப் புகழ்பெற்ற பாடகி மற்றும் நடிகையான ஜெனிஃபர் லோபெஸ் கூட தன் பிருட்டத்துக்கு இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கிறார். மிஸ் பம்பம் போட்டியில் வெற்றி பெற லரிசா மேக்ஸிமோனாவுக்கு நம் வாழ்த்துக்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?