Melisa Raouf Twitter
உலகம்

மிஸ் இங்கிலாந்து போட்டி - மேக் அப் இல்லாமல் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய அழகி

Priyadharshini R

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 'மிஸ் இங்கிலாந்து 2022' அழகிப் போட்டியில் 20 வயதான மெலிசா ரவூப் என்ற பெண் மேக் அப் எதுவும் இல்லாமலேயே இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

பொதுவாக அழகி போட்டி என்றாலே அங்கு ஒப்பனை அலங்காரம் இருக்கும். ஆனால் லண்டன் நகரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி அதனை எல்லாம் மாற்றியமைத்துள்ளார்.

கல்லூரியில் அரசியல் படித்து வரும் மெலிசா, இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 'மிஸ் இங்கிலாந்து 2022' போட்டியில் கலந்துக்கொண்டுள்ளார். அதுவும் மேக் அப் எதுவும் இல்லாமலேயே இவர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது தான் கூடுதல் சிறப்பு.

மிஸ் இங்கிலாந்து போட்டியின் 94 வருட வரலாற்றில், அழகி ஒருவர் முதல் முறையாக மேக் அப் இல்லாமல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இது குறித்து மெலிசா ரவூப் கூறுகையில்,

நமது இயற்கையான தோல் நமக்கு பிடித்திருந்தால் அதை மேக் அப் என்ற பெயரில் பிறருக்காக மூடி மறைக்க வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் அழகு குறித்து சொல்லப்படும் வரையறைகளை மாற்றவும் மேக் அப் இல்லாமல் போட்டியில் பங்கேற்றதாக மெலிசா கூறியுள்ளார்.

மேலும், பல பெண்கள் விருப்பம் இல்லாவிட்டாலும், சமூக அழுத்தம் காரணமாக மேக் அப் போட்டு கொள்வதாக கூறிய மெலிசா, அழகு பற்றிய சில விஷயங்களை தான் உடைக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மிஸ் இங்கிலாந்து இறுதிப் போட்டியில் வெற்றி பெற மெலிசாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?