”அடையாளம் தெரியல” இரட்டையர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டி சென்ற பெண்! ட்விட்டர்
உலகம்

”அடையாளம் தெரியல” இரட்டை குழந்தைகளை காவல் நிலையம் கூட்டி சென்ற பெண்!

Keerthanaa R

தனது இரட்டைக் குழந்தைகளில் யார் யார் என்ற அடையாளம் தெரியாததால் அவர்களை அடையாளம் காண காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார் பெண் ஒருவர்.

அர்ஜென்டினாவை சேர்ந்த பெண் சோபியா. இவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. வேலண்டீன் மற்றும் லொரென்ஸோ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த குழந்தைகளை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார் சோபியா. இதற்காக அவர் கூறிய காரணம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து அவர் பகிர்ந்திருந்ததில்,

“நாளை நான் எனது இரட்டையர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்களின் கைரேகைகளை சேகரித்து வைக்கவுள்ளேன். அதை வைத்து தான் அவர்களை அடையாளம் கண்டுகொள்ளவேண்டும்.” என்றார் சோபியா.

புகைப்படங்களில் இவர்களை அடையாளம் காண எளிதாக இருந்தாலும், நேரில் கண்டுகொள்வது கடினமாக இருக்கிறது என்கிறார் சோபியா. ஒரே குழந்தைக்கு இரண்டு முறை தடுப்பூசி செலுத்திவிட்டனர். இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

இவர்கள் கொஞ்சம் வளர்ந்து தெளிவாக இவர்களை வேறுபடுத்த முடியும்வரை அடையாளம் காணவே கைரேகைகளை சேகரிக்க முடிவு செய்துள்ளார் சோபியா.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக இரட்டையர்களின் கைரேகைகளை இவர்களால் சேகரித்துக்கொள்ள முடியவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் திரும்பினார் சோபியா. ட்விட்டரில் இந்த கதை பகிரப்பட்டதிலிருந்து இணையவாசிகள் தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?