மங்கோலியா: 1960 களில் அழிந்து போன டாகி குதிரைகள் மீண்டும் வந்தது எப்படி? Twitter
உலகம்

மங்கோலியா: 1960 களில் அழிந்து போன டாகி குதிரைகள் மீண்டும் வந்தது எப்படி?

உலகில் இப்போது எஞ்சியிருக்கும் ஒரே ஒரு வகை காட்டுக்குதிரைகள் இவை மட்டும் தான். ஒரு காலத்தில் நாடோடி மக்கள் இந்த குதிரைகளுடன் தொடர்பு வைத்திருந்தனர்.

Antony Ajay R

மங்கோலிய காட்டு குதிரைகள் கட்டுமஸ்தான உடலமைப்பைக் கொண்டவை. முகத்தில் செவலை நிறமும் உடலில் வெளிறிய நிறமும் கொண்டிருக்கும்.

கால்களிலும் பின் கழுத்து நிறத்திலும் அடர் கருப்பு நிறத்துடன் காட்டில் பாய்ந்து ஓடும் போது கண்களைப் பறிக்கும். மங்கோலிய காடுகளில் ஒரு காலத்தில் எக்கச்சக்கமாக சுற்றித் திரிந்த இவற்றுக்கு Przewalski குதிரை என்று பெயர். (Przewalski என்பது ஒரு ரஷ்ய உயிரியளாலரின் பெயர்). டாகி (Takhi) என்றும் இதனைக் குறிப்பிடுகின்றனர்.

உலகம் முழுவதும் பல அழகான குதிரைகள் இருக்கின்றன. இவை மட்டும் எப்படி சிறப்பு வாய்ந்தவை?

உலகில் இப்போது எஞ்சியிருக்கும் ஒரே ஒரு வகை காட்டுக்குதிரைகள் இவை மட்டும் தான். ஒரு காலத்தில் நாடோடி மக்கள் இந்த குதிரைகளுடன் தொடர்பு வைத்திருந்தனர்.

இயற்கையோடும் காட்டோடும் இணைந்து வாழும் மிருகங்களாக இந்த குதிரைகள் அறியப்படுகின்றன. இவற்றைப் பற்றிய மங்கோலிய நாடோடி மக்கள் புராணக்கதைகளைக் கொண்டுள்ளனர்.

மங்கோலிய புல்வெளியை ஆண்டுவந்த இந்த குதிரைகள் 1960களில் காணாமல் போயின. ஒரு குதிரைக் கூட மத்திய ஆசியாவில் காணப்படவில்லை.

மனித இனத்தின் அசுர வளர்ச்சியில் காணாமல் போன ஆயிரக்கணக்கான உயிரினங்கள் ஒன்றாக மறைந்துவிட்டது என எல்லாருமே நினைத்தனர்.

ஆனால் இங்கிலாந்தில் உள்ள ஒரு மிருகக் காட்சி சாலையில் 12 எண்ணிக்கையிலான மங்கோலிய காட்டுக் குதிரைகள் மட்டும் எஞ்சியிருந்தன.

இவை அழியும் நிலையில் இருப்பதனால் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ளத் தொடங்கினர்.

ஆராய்ச்சியாளர்களும் விலங்குகள் பாதுகாவலர்களும் மிகுந்த கவனத்தோடு அந்த குதிரைகளை இனப்பெருக்கம் செய்தனர். 12 குதிரைகள் 50 ஆக வளர்ந்தது.

50லிருந்து 100 ஆனது 300 ஆனது குதிரைகளின் எண்ணிக்கை வளர்ந்துகொண்டே சென்றது. இப்போது கிட்டத்தட்ட 2000 மங்கோலிய காட்டுக்குதிரைகள் உலகில் இருக்கின்றன.

இவற்றில் 400 குதிரைகள் தங்களது முன்னோர்கள் சுதந்திரமாக சுற்றித்திரிந்த மங்கோலிய காடுகளிலேயே இப்போது வளர்கின்றன.

மங்கோலிய புல்வெளிக் காடுகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைத்திருந்த டாகி குதிரைகளை மீண்டும் அள்ளி அணைத்துக்கொண்டது.

மங்கோலியா சென்றால் இந்த குதிரைகளை தவறாமல் பார்த்து வாருங்கள். மனிதர்களாகிய நாம் நினைத்தால் அழிந்த ஒரு இனத்தை மீண்டும் அதன் இருப்பிடத்தில் சுதந்திரமாக வாழவைக்கவும் முடியும்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?