புதின், மோடி, செலென்ஸ்கி,

 

Twitter

உலகம்

Morning News Tamil: உக்ரைன் ரஷ்ய அதிபர்களுடன் மோடி பேச்சு; தலைமை பேச்சை கேட்காத திமுகவினர்

Antony Ajay R

ரஷியா, உக்ரைன் அதிபர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு


ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையில் போர் தொடங்கி 13 நாட்களாக நடந்து வருகிறது. இந்த சூழலில் உக்ரைனில் வசிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி மற்றும் ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்தினார்.

செலென்ஸ்கியிடம், இந்த போர் மற்றும் அதன் விளைவாக எழுந்துள்ள மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து பிரதமர் மோடி ஆழ்ந்த கவலை வெளியிட்டார். அத்துடன் தாக்குதலை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும் வலியுறுத்தினார்.

பின்னர் உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க உக்ரைன் வழங்கி வரும் உதவிகளுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

அங்கு இன்னும் மீதமிருக்கும், குறிப்பாக கடுமையான போர் நடந்து வரும் சுமி நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க உதவுமாறும் கோரிக்கை விடுத்தார்.

இந்த பேச்சு வார்த்தை 35 நிமிடம் நீடித்தது.

இதனைத் தொடர்ந்து புதினிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துமாறு புதினை கேட்டுக்கொண்டார்.

மேலும் உக்ரைனில் போர் நிறுத்தத்தை அறிவித்ததற்காகவும், சுமி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு வழிகளை திறந்ததற்காகவும், இந்தியர்கள் வெளியேற உதவுவதற்காகவும் புதினுக்கு மோடி நன்றி தெரிவித்தார்.


உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களளை மீட்பது குறித்து மோடி பேசியதற்கு பதில் அளித்த புதின், உக்ரைனில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவதாக உறுதியளித்தார்.

இரு தலைவர்களுக்கு இடையிலான பேச்சு வார்த்தை 50 நிமிடம் வரை நீடித்தது.

Vladimir Putin

"நாங்கள் நினைத்ததை சாதிப்போம்" - உறுதியான புதின், அச்சத்தில் உக்ரைன் மக்கள்

ரஷ்யாவின் தாக்குதலை எதிர்த்து உக்ரைன் பதிலடி கொடுத்து வரும் நிலையில், சரண் அடையுமாறு உக்ரைனுக்கு ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். ரஷ்யா - உக்ரைன் மோதல் குறித்த சமீபத்திய தகவல்கள் வெளிவந்துள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், உக்ரைனில் இருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை 15 லட்சமாக உயர்ந்துள்ளது. உக்ரைனின் மரியுபோல் நகரை ரஷ்ய ராணுவம் முற்றுகையிட்டு பொதுமக்களை சிறைபிடித்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த சூழலில் சரண் அடையுமாறு உக்ரைனுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் சரண்டர் அடையும் வரையில் ரஷ்யா தாக்குதலை நிறுத்தப் போவதில்லை என்று புதின் அறிவித்திருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

போர் நிறுத்தத்தை மீறி பல இடங்களில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் உணவு, தண்ணீர் இல்லாமல் உக்ரைன் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மைகோலாயிவ் நகரை ரஷ்ய ராணுவம் கைப்பற்றி உள்ள நிலையில் அதனை மீட்பதற்காக உக்ரைன் ராணுவத்தினர் தீவிர சண்டையில் ஈடுபட்டுள்ளனர். ரஷ்யாவுக்கான சாலை மார்க்கம் மற்றும் உக்ரைனுக்கான துறைமுகம் என இந்த நகரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவும் பொருளாதார தடைகளை விதித்து வரும் நிலையில், கடைகளில் குறைந்த அளவு உணவுப் பொருட்களையே விநியோகம் செய்யுமாறு ரஷ்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

போர் தொடங்கியது முதல் தற்போது வரை ரஷ்யாவின் கையே ஓங்கியுள்ளதால், விரைவில் உக்ரைனை தனது கட்டுப்பாட்டிற்குள் ரஷ்யா கொண்டு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக பேட்டி அளித்திருந்த அதிபர் புதின், 'பேச்சுவார்த்தை அல்லது போர் மூலமாக தாங்கள் நினைத்ததை சாதிப்போம்' என்று கூறியிருந்தார்.

Arabic Kuthu

‘பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘அரபிக்குத்து’ பாடல் வரிகளுக்காக சிவகார்த்திகேயனைப் பாராட்டியுள்ளார் விஜய்.


விஜய் நடிப்பில், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் பீஸ்ட் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்மூரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தின் "அரபிக் குத்து" என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. மேலும், யூடியூபில் குறைந்த நாட்களில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த பாடல் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளது ‘அரபிக்குத்து’. இந்தப் பாடலின் வரிகளை சிவகார்த்திகேயன் எழுத, அனிருத் - ஜோனிடா காந்தி இருவரும் இணைந்து பாடியிருக்கிறார்கள்.


‘அரபிக்குத்து’ பாடல் வரிகளுக்கு விஜய் தன்னைப் பாராட்டியதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். நேற்று (மார்ச் 7) விருது வழங்கும் விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் சிவகார்த்திகேயன். அதில் “அரபிக்குத்து பாடலுக்கு விஜய் சார் என்ன சொன்னார்” என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு, அரபிக்குத்து பாடல் ரொம்ப முன்னாடியே படமாக்கி முடிச்சாச்சு. அப்போது விஜய் சார் என்ன சொன்னார் என்று எனக்குத் தெரியாது. எனக்கு போன் எதுவும் வரவில்லை. சமீபத்தில் தான் ப்ரோமோ வீடியோ ஷுட் செய்தோம். அப்போது தான் விஜய் சார் தொலைபேசியில் "சூப்பர் பா. எழுதிக் கொடுத்ததிற்கு ரொம்ப தேங்க்ஸ் பா. அரபிக் எல்லாம் பயங்கரமா எழுதுறியே" என்றார்.

உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லையே சார். அனிருத் பாதி பாடிவிடுவார், நாம் சும்மா விட்ட இடத்தை நிரப்ப வேண்டியது தான் என்று கூறினேன். அவருக்கு ‘அரபிக்குத்து’ பாடல் ரொம்பவே பிடித்துள்ளது. முதல் தடவைக் கேட்ட உடனேயே இது பெரிய ஹிட் என்று அனிருத்திடம் தெரிவித்துள்ளார் விஜய் சார்” என்று சிவகார்த்திகேயன் கூறினார்.

மகளிர் தினம்

சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாட்டம்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து

இன்று சர்வதேச மகளிர் தினத்தையோட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அவரது வாழ்த்து செய்தி,

பெண் ஏன் அடிமையானாள் என்று கேள்வியெழுப்பி, அறிவொளிப் பாய்ச்சிய பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் வழியில் நடைபோடும் திராவிட மாடல் அரசு, மகளிர்களுக்கான எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது.

பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை, அரசு வேலைவாய்ப்புகளில் 40 சதவீதமாக இடஒதுக்கீடு உயர்வு, தொடக்கப் பள்ளிகளில் முழுவதும் பெண் ஆசிரியர்கள் நியமனம், உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு, பேறுகால விடுப்பு ஒரு ஆண்டாக உயர்வு,மகளிர் சுயஉதவிக் குழு, திருமண நிதி உதவி,கல்விக் கட்டணச் சலுகைகள், நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் என்று பெண்களுக்கான சமூக பொருளாதார உரிமைகளை மீட்டளிக்கும் திட்டங்களை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். பெண்களின் முன்னேற்றத்துக்குத் திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும்.

முதல்வர் ஸ்டாலின்

தலைமைக்கு தண்ணிர் காட்டும் திமுகவினர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மறைமுக தேர்தலின்போது கட்சி அறிவித்த வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்கள் எதையுமே சட்டை செய்யாமல் தன்னிச்சையாக போட்டியிட்டு திமுகவினர் பல இடங்களில் வெற்றி பெற்றனர்.

இது தொடர்பான செய்தி கவனத்துக்கு வந்தவுடன், உடனடியாக திமுக தலைவர் ஒரு காட்டமான அறிக்கையை வெளியிட்டார், அதில், “ கூட்டணி தர்மத்தை மீறிய திமுகவினரின் செயலுக்காக கூனிக்குறுகி நிற்கிறேன். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், தலைமையின் உத்தரவை மீறி வெற்றிபெற்றவர்கள் உடனடியாக தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு என்னை வந்து நேரில் சந்திக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.


இந்த கடுமையான அறிக்கைக்குப் பின்னரும் சில இடங்களில் கட்சி உத்தரவை மீறி வெற்றிபெற்றவர்கள் ராஜினாமா செய்யாமல் போக்கு காட்டி வருகிறார்கள்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?