பொருளாதார அறிஞர் ஸ்டீவ் ஹன்கேவின் வருடாந்திர துயரமான நாடுகள் பட்டியலில் இந்த ஆண்டு ஜிம்பாப்வே முதலிடம் பிடித்துள்ளது.
157 நாடுகளின் தரவுகளை கொண்டு இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. முக்கியமாக நாடுகளின் பொருளாதார நிலை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
உக்ரைன், சிரியா, சூடான் போன்ற போரால் பாதிக்கப்பட்ட நாடுகளை விட தென்னாப்பிரிக்க நாடான ஜிம்பாப்வே துயரமான நிலையில் இருப்பதாக இந்த பட்டியலில் கூறப்படுகிறது.
ஜிம்பாப்வேயில் உச்சத்தில் இருக்கும் பணவீக்கம் தான் அதன் மோசமான நிலைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு பணவீக்கம் 243.8 விழுக்காடு எனக் கூறப்படுகிறது.
இந்த அறிக்கையில் படி, ஜிம்பாப்வே ஜனாதிபதி எம்மர்சன் மங்காக்வாவின் கொள்கைகள் மக்களுக்கு அதிக துயரத்தை விளைவிப்பதாக உள்ளது.
ஸ்டீவ் ஹன்கே ட்வீட்டில், வேலையின்மை, பணவீக்கம், வங்கி கடன் விகிதங்கள் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி மாற்றம் ஆகியவை ஜிம்பாப்வேவின் இந்த நிலைக்கு காரணம் எனக் கூறியுள்ளார்.
157 நாடுகளில் சுவிச்சர்லாந்து கடைசி இடத்தில் உள்ளது. அதாவது மிக மிக மகிழ்ச்சியான நிலையில் உள்ளது. இரண்டாவது மகிழ்ச்சியான நாடாக குவைத் உள்ளது. அடுத்தடுத்த இடத்தில் அயர்லாந்து, ஜப்பான், மலேசியா, தைவான் ஆகிய நாடுகள் உள்ளன.
வெனிசுலா, சிரியா, லெபனான், சூடான், அர்ஜென்டினா, ஏமன், உக்ரைன், கியூபா, துருக்கி, இலங்கை, ஹைட்டி, அங்கோலா, டோங்கா மற்றும் கானா ஆகிய நாடுகள் மோசமான நிலையில் உள்ளன.
இந்தியா இந்த பட்டியலில் 103வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் இந்த நிலைக்கு வேலைவாய்ப்பின்மை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust