9 வயது சிறுமிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வலியுறுத்திய தாய்! Twitter
உலகம்

”என் மகள் அழகாக இருக்க வேண்டும்” 9 வயது சிறுமிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி - அடம்பிடித்த அம்மா!

சிறுவயதில் தனக்கு இரட்டை கண் இமைகள் இல்லாததால் உள்ளார்ந்த பாதுகாப்பின்மை உணர்வை அனுபவித்ததாக பகிர்ந்து கொண்டார்.

Priyadharshini R

கைலி ஜென்னர் போன்ற பல பிரபலங்கள் அழகாக இருக்க பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளனர். ஒருவரின் மூக்கைக் கூர்மைப்படுத்தவோ, அல்லது உதடுகளை சரி செய்யவோ உடல் பாகங்களை தங்கள் விருப்பப்படி பல்வேறு காரணங்களாக அறுவை சிகிச்சை செய்து அழகுப்படுத்திக்கொள்கின்றனர்.

இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த அறுவை சிகிச்சை செய்துக் கொள்வதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இங்கு 9 வயது சிறுமி இவ்வாறு செய்ய அவரது தாயாரே வற்புறுத்தி வருகிறார்.

வைஸ் டிவிக்கு அளித்த பேட்டியில், சிறுமியின் தாய் ருச்சி,

சிறுவயதில் தனக்கு இரட்டை கண் இமைகள் இல்லாததால் உள்ளார்ந்த பாதுகாப்பின்மை உணர்வை அனுபவித்ததாக பகிர்ந்து கொண்டார். ஆசிய நாடுகளில் இரட்டைக் கண் இமைகள் அழகுத் தரத்தின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது.

இரட்டைக் கண் இமைகள் இல்லாதது, தனக்கு அழகு குறைந்ததை போன்று உணர்ந்ததாக ருச்சி கூறினார். எனவே, தனது மகளும் இப்படியான சிக்கலுடன் வளர விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

குழந்தை பருவத்தில் தனது சொந்த அனுபவத்தை நினைவு கூர்ந்த ருச்சி, அக்கம்பக்கத்தில் யாரும் தன்னை அழகு என்று கூறவில்லை என்றும், அவரது சகோதரியை தான் அழகாக இருப்பதாக கூறி இனிப்பு கொடுப்பார்கள் என்று ருச்சி புலம்பினார். எனவே தனது மகளுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

நியூயார்க் போஸ்ட் படி, சிறார்களுக்கு பெற்றோரின் ஒப்புதலுடன் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்வது ஜப்பானில் சட்டப்பூர்வமாக உள்ளது.

உலக நாடுகள் தரவரிசையில் ஜப்பான் 4வது இடத்தில் உள்ளது. அங்கு மில்லியன் கணக்கான மக்கள் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொள்ள ஆர்வமாக உள்ளனர். இருப்பினும், குழந்தை உளவியலாளர் டோமோஹிரோ சுஸுகி, குழந்தைகள் இவ்வளவு இளம் வயதில் அறுவை சிகிச்சை செய்துகொள்வது குறித்தும் எச்சரித்துள்ளனர்.

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்தாலும், அந்த உருவம் காலப்போக்கில் மீண்டும் மாறக்கூடும் என்று உளவியலாளர் கூறியிருக்கிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?