எவரெஸ்ட் : உலகின் மிக பெரிய மலைச்சிகரம் வளருகிறதா? - 7 ஆச்சரிய தகவல்கள்! Twitter
உலகம்

எவரெஸ்ட் : உலகின் மிக பெரிய மலைச்சிகரம் வளருகிறதா? - 7 ஆச்சரிய தகவல்கள்!

Antony Ajay R

உலகின் மிக உயரமான மலைச் சிகரம் என்று அறியப்படும் எவரெஸ்ட் மிகவும் கவர்ச்சிகரமானதும் கூட. நேபாளம் நாட்டில் அமைந்துள்ள இந்த மலையில் ஏறுவது மலை ஏற்றம் மேற்கொள்பவர்களின் கனவு என்றேக் கூறலாம்.

திபெத் - நேபாளம் எல்லையில் அமைந்துள்ள எவரெஸ்டில் ஏறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் அந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். ஆனால் சிலர் மட்டுமே வெற்றிகரமாக உச்சிக்கு ஏறுகின்றனர்.

இந்த சாதனைக்காரர்களின் காதல் மலையான எவரெஸ்ட் குறித்து நம்மை வியக்க வைக்கும் உண்மைகளைக் காணலாம்.

எவரெஸ்டின் வயது என்ன?

எவரெஸ்ட் சிகரத்தின் வயது 60 மில்லியன் ஆண்டுகள் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவின் கண்ட தட்டுகள் ஆசியப் பெருநிலத்துடன் மோதியதன் விளைவாக உருவானதே எவரெஸ்ட் மலைச் சிகரம் என அறிஞர்கள் கூறுகின்றனர்.

சந்தேகமான உயரம்?

2015ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்துக்குப் பிறகு எவரெஸ்ட் உயரத்தில் மாற்றம் இருக்கலாம் அறிஞர்கள் கூறுகின்றன. இப்போது எவரெஸ்டை திரும்பவும் அளவிட திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

எவரெஸ்டின் முந்தைய பெயர் என்ன தெரியுமா?

எவரெஸ்ட் மலைச் சிகரம் சர் ஜார்ஜ் எவரெஸ்ட் என்பவரால் 1841ம் ஆண்டு கண்டறியப்பட்டு உலகின் வெளிச்சத்துக்கு வந்தது.

அவர் அதற்கு உச்சி 15 எனப் பெயர் வைத்தார். ஆனால் 1865ம் ஆண்டு ஜார்ஜ் எவரெஸ்ட்க்கு மரியாதை செய்யும் விதமாக எவரெஸ்ட் எனப் பெயர் சூட்டப்பட்டது.

எவரெஸ்டிக்கு உண்மையாக நேபாளிகள் சூட்டிய பெயர் சகர்மாதா. இதற்கு வானின் கடவுள் என்று பெயர்.

மறுபுறம் திபெத்திய மக்கள் சோமோலுங்மா என்ற பெயரில் அழைக்கின்றனர். இதற்கு மலைகளின் தெய்வீக தாய் என்று பொருள்.

ஒவ்வொரு ஆண்டும் எவரெஸ்ட் வளருகிறதா?

பூமியின் டெக்டோனிக் தட்டுகள் தொடர்ந்து நகர்வதனால் இமயமலைகள் தள்ளப்படுகின்றன. இதன் விளைவாக எவெரெஸ்ட் சிலரம் தொடர்ந்து வளர்ந்துகொண்டிருக்கிறது.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏற அதிக பணம் தேவையா?

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு செலவாகும் பணத்தின் அளவும் உயர்ந்துகொண்டே இருக்கிறது.

உடல் அளவில் மட்டுமல்ல உங்கள் பர்சையும் பதம் பார்த்துவிடும் எவரெஸ்ட் பயணம்.

ஒரு முறை எவடெஸ்ட் உச்சிக்கு செல்ல 34 லட்சம் ரூபாய் செலவாகுமாம்.

எவரெஸ்டின் உயரம்?

முதன்முதலாக 1856ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை 8840 மீட்டர் அளவிட்டனர்.

மீண்டும் 1955ம் ஆண்டு 8848 என அளவிட்டனர். 2021ம் ஆண்டிலிருந்து எவரெஸ்ட்டை திரும்ப அளவிடுவது பற்றி சிந்தித்து வருகின்றனர்.

Kami Rita Sherpa

Kami Rita Sherpa

கமி ரிதா ஷெரபா என்ற நேபாளத்தைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி அதிகமுறை எவரெஸ்டை ஏறி இறங்கியவர் என்ற பெருமையைக் கொண்டுள்ளார்.

இவர் 1994 முதல் 2022 வரை மொத்தம் 26 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியிருக்கிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?