Mumbai to New York: Most expensive cities to park you car in 2023  canva
உலகம்

ஒரு மணி நேரத்திற்கு 4 ஆயிரமா? அதிக பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் நகரங்கள் பற்றி தெரியுமா?

பரபரப்பான நகரத்தில் கார் ஓட்டுவது எவ்வளவு சிக்கலானதோ அதனை விட கூடுதல் சவாலானது பார்க்கிங், நிறுத்த இடமெல்லாம் இருக்கும் ஆனால் அதற்கு நீங்கள் 4 ஆயிரம் ரூபாய் வரை பொது பார்க்கிங் கட்டணமாக செலவு செய்யவேண்டியிருக்கும்.

Priyadharshini R

உலகெங்கிலும் உள்ள முக்கிய பெருநகரங்களில் வசிப்பவர்களுக்கு பெரிய சவாலாக இருப்பது போக்குவரத்து நெரிசல். உதாரணமாக பெங்களூரு, மும்பை போன்ற இடங்களை எடுத்துக்கொண்டால், அங்கு சொந்த போக்குவரத்து வைத்திருந்தாலும் சரி, பொது போக்குவரத்தாக இருந்தாலும் சரி கடுமையான போக்குவரத்து நெரிசல், வழக்கமாகிவிட்டது.

பரபரப்பான நகரத்தில் கார் ஓட்டுவது எவ்வளவு சிக்கலானதோ அதனை விட கூடுதல் சவாலானது பார்க்கிங், நிறுத்த இடமெல்லாம் இருக்கும், ஆனால் அதற்கு நீங்கள் 4 ஆயிரம் ரூபாய் வரை பொது பார்க்கிங் கட்டணமாக செலவு செய்யவேண்டியிருக்கும்.

அப்படி உலகெங்கிலும் உள்ள ஆறு முக்கிய நகரங்கள், அந்தந்த நாடுகளில் உள்ள மற்ற நகரங்களுடன் ஒப்பிடும்போது, அதிக அளவு பார்க்கிங் கட்டணங்கள் வசூலிக்கின்றன.

மும்பை

மும்பை நகரம் பல விஷயங்களுக்கு பெயர் பெற்றது, அவற்றில் ஒன்று அதிகமான ட்ராஃபிக்.

வாஷி, சிவாஜி சவுக்கின் பரபரப்பான இடத்தில் கார்களை நிறுத்த விரும்புவோர், ஒரு மணி நேரத்திற்கு 100 ரூபாய் செலுத்த வேண்டும். இது மும்பையின் மிகவும் விலையுயர்ந்த பார்க்கிங் இடமாக மாறியுள்ளது.

துபாய்

துபாயில் ஒரு மணிநேரத்திற்கு குறைந்தபட்ச பார்க்கிங் கட்டணம் AED 3 (ரூ. 68). முதல் நான்கு மணி நேரத்திற்கு AED 16 (ரூ. 363) வரை வசூலிக்கப்படுகிறது. நான்கு மணிநேரத்திற்கு மேல் போனால் வாகன உரிமையாளருக்கு AED 20 (ரூ. 453) வரை வசூலிக்கப்படுகிறது.

பாரிஸ்

சென்ட்ரல் பாரிஸில், உங்கள் வாகனத்தை நிறுத்துவதற்கான கட்டணங்கள் ஒரு மணி நேரத்திற்கு 4 யூரோ முதல் 6 யூரோக்கள் வரை ஆகும். இது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 351 முதல் ரூ. 527 வரை இருக்கும். சென்ட்ரல் பாரிஸில் தான் இப்படி மிட் டவுன் மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்குச் செல்லும்போது பார்க்கிங் கட்டணங்கள் மலிவாக இருக்கும்.

லண்டன்

லண்டன் உங்கள் காரை நிறுத்துவதற்கு மிகவும் விலையுயர்ந்த நகரமாக கருதப்படுகிறது. 2005 மற்றும் அதற்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட வாகனத்திற்கு, ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக பார்க்கிங் கட்டணம் GBP 4.90 மற்றும் GBP 7.20 வசூலிக்கப்படுகிறது. அதாவது தோராயமாக ரூ.726 ஆக இருக்கும்.

ஆம்ஸ்டர்டாம்

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் காரை நிறுத்துவதற்கு மிகவும் விலையுயர்ந்த நகரமாக கருதப்படுகிறது. இந்த நகரத்தில் சராசரியாக ஒரு மணிநேர பார்க்கிங் கட்டணம் சுமார் 13.82 யூரோக்கள் ( ரூ.1,215 ).

நியூயார்க்

உங்கள் தனிப்பட்ட காரை நிறுத்துவதற்கு இங்கு ஆகும் செலவே தனி.

உலகின் மிக விலையுயர்ந்த நகரங்களில் நியூயார்க் ஒன்றாகும். சராசரி தினசரி பார்க்கிங் கட்டணம் USD 19 (ரூ. 1,581), ஆனால் இது USD 50 வரை செல்லலாம். அதாவது இந்திய மதிப்பில் 4,166 வரை வசூலிக்கப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?