இடதுபக்கம் வடதுருவ ஒளி, வலது பக்கம் மர்ம ஒளி  Twitter
உலகம்

இங்கிலாந்து : வானத்தில் அடுத்தடுத்து மர்ம நிகழ்வுகள் - என்ன நடக்கிறது அங்கே?

Antony Ajay R

இங்கிலாந்து வானத்தில் மர்மமான ஒளி தென்பட்டதாக இண்டிபென்டண்ட் செய்தி தளம் கூறியுள்ளது.

இது வெள்ளையாக மேகங்களுக்கு ஒளிர்ந்து, சில வினாடிகளே தென்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக இங்கிலாந்தில் பல இடங்களில் தென்பட்டு வந்த வடதுருவ ஒளி இல்லை எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இது என்ன என்பது குறித்து தெளிவான விளக்கங்கள் இதுவரை கொடுக்கப்படவில்லை.

மறுபக்கம் அதிசயமாக வடதுருவத்தில் மட்டுமே தெரியும் ஒளி இங்கிலாந்திலும் பல இடங்களில் தெரிந்துள்ளது. மக்கள் அதனைப் புகைப்படம் எடுத்துப் பகிர்ந்து வருகின்றனர்.

அரோரா அல்லது வடதுருவ ஒளியானது சூரியனில் இருந்து சூரிய கதிர்கள் வெடிப்பதனால் உருவாகும். பூமியின் காந்தப்புலத்தினால் தடுக்கப்படாத கதிர்கள் மின்னூட்டப்பட்ட துகள்களாக வடதுருவம் வழியாக பூமியில் நுழையும்.

அப்போது வளிமண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜனுடன் இணைந்து பச்சை, சிகப்பு நிறங்களை வெளிப்படுத்தும்.

பார்ப்பதற்கு கண்கவர் காட்சியாக இருந்தாலும் இதனால் ஓசோன் மண்டல சிதைவு, காலநிலை மாற்றம் உள்ளிட்ட பாதிப்புகள் உள்ளன.

பொதுவாக இந்த ஒளி நார்வே மாதிரியான வடதுருவ நாடுகளிலும், அண்டார்டிகாவிலும் மட்டுமேத் தெரியும்.

வலிமையான சூரிய கதிர் வெடிப்பால் இப்போது அதிகமான வடதுருவ ஒளி தென்படுகிறது. இதனை மக்கள் மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்து பகிர்ந்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?