துருக்கி - சிரியா நிலநடுக்கம்: பிறந்து 10 நாளான குழந்தை மீட்பு - நெகிழ வைக்கும் கதை Twitter
உலகம்

துருக்கி - சிரியா நிலநடுக்கம்: பிறந்து 10 நாளான குழந்தை மீட்பு - நெகிழ வைக்கும் கதை

NewsSense Editorial Team

துருக்கியில் இந்த வார திங்கட்கிழமை அன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அடுத்தடுத்து தொடர்ந்து நிலநடுக்கங்கள் வந்து ஒட்டுமொத்த துருக்கி மற்றும் சிரிய எல்லையை சீர்குலைத்துவிட்டன.

இந்த நிலநடுக்கத்தினால் பல்வேறு குடியிருப்புகள் சீட்டு கட்டுகள் சரிவது போல, சரிந்து விழுந்ததில், பலரும் தங்கள் வீடுகளுக்குள்ளேயே உயிரிழந்தனர். அப்பேர்ப்பட்ட ஒரு மோசமான இடிபாடுகளில் சிக்கிய, ஒரு பச்சிளம் குழந்தையும், அந்தக் குழந்தையைப் பெற்றெடுத்த தாயும், சுமார் 90 மணி நேரத்துக்குப் பிறகு உயிரோடு மீட்கப்பட்டு இருக்கின்றனர்.

பேரரிடரைத் தொடர்ந்து சடலங்களையும் மரண ஓலங்களையும் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்த சர்வதேச நாடுகளுக்கு, இந்த தாய் சேய் மீட்கப்பட்ட செய்தி, ஒரு நிம்மதி பெருமூச்சை எடுத்துக் கொள்ள வாய்ப்பு கொடுத்திருக்கிறது.

யாகிஸ் என்று பெயரிடப்பட்டுள்ள, பிறந்து 10 நாட்கள் மட்டுமே ஆன குழந்தையும், அவரது தாயும் துருக்கி நாட்டின் தென் பிராந்தியத்தில் உள்ள ஹதே மாகாணத்தில் சமன்தக் (Samandag) நகரத்தில் இருந்து மீட்கப்பட்டனர்.

குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டதை உள்ளூர் ஊடகம் ஒன்று படம்பிடித்திருந்தது. இந்த சிறிய நம்பிக்கை கீற்றை தொடர்ந்து, இன்னும் பலரும் உயிரோடு இருக்கலாம், அவர்களும் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என உத்வேகத்தோடு பலரும் வேலை பார்த்து வருகின்றனர்.

மீட்கப்பட்ட குழந்தை யாகிஸை, உடனடியாக தெர்மல் கம்பளியில் வைத்துப் போர்த்தி ஆம்புலன்ஸுக்கு எடுத்துச் சென்றனர். குழந்தை யாகிசின் தாயையும் மீட்டு ஒரு கட்டிலில் வைத்து இடர்பாடுகளில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். தாய் & சேயின் உடல் நலம் நன்றாக இருக்கிறதா? என்பது குறித்த எந்த ஒரு விவரங்களும் இதுவரை கிடைக்கவில்லை.

newborn baby (rep)

இதுவரை துருக்கி நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலநடுக்கத்தின் காரணமாக சுமார் 21,000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். கடந்த திங்கட்கிழமை காலை, துருக்கியில் 7.8 ரிட்டர் அளவுக்கு ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கமும் அதனை தொடர்ந்து சுமார் 100 முறைக்கு மேல் சிறு சிறு நில அதிர்வுகளும் ஏற்பட்டன.

இந்த நிலநடுக்கங்களினால் மக்கள் வீடு வாசலை எல்லாம் இழந்து, தங்க இடமின்றி தவித்து வருகிறார்கள். அவர்களுடைய அடிப்படை தேவைக்குக் கொடுக்க வேண்டிய குடிக்க நீர், எரிபொருள், மின்சாரம் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கூட இல்லாமல் மொத்த நாடும் அவதிப்பட்டு வருகிறது.

துருக்கி நாட்டின் அதிபர் ரெசிப் தயீப் எர்தோகன், இது இந்த நூற்றாண்டின் மிக மோசமான பேரழிவு என்று குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் துருக்கியில் உள்ள எதிர்க்கட்சிகளோ நிலநடுக்க வரி என்கிற பெயரில் வசூலிக்கப்பட்ட 88 பில்லியன் லிரா (4.6 பில்லியன் அமெரிக்க டாலர்) எப்படி செலவழிக்கப்பட்டது என்கிற விவரங்களை கொடுக்க வேண்டும் என ஆளுங்கட்சியை வலியுறுத்தி வருகிறார்கள்.

கடந்த 1999 ஆம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் 17,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து நிலநடுக்க வரி வசூலிக்கப்படத் தொடங்கியது. இந்த வரித் தொகையை, பேரழிவு தடுப்பு மற்றும் அவசரகால சேவைகளை மேம்படுத்த பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது. அதிபர் எர்தோகன் கடந்த பல ஆண்டுகளாக ஒரு நிலநடுக்கத்தைக் கூட எதிர்கொள்ளத் தயாராகவில்லை என துருக்கி நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் கெமல் கிலிக்தரோக்லு (Kemal Kilicdaroglu) குற்றம்சாட்டியுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust


பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?