இந்தோனேசியா: திருமணத்துக்கு முன் உடலுறவு கூடாது, கம்யூனிசம் தடை - சர்ச்சையாகும் சட்டங்கள்? twitter
உலகம்

இந்தோனேசியா: திருமணத்துக்கு முன் உடலுறவு கூடாது, கம்யூனிசம் தடை - சர்ச்சையாகும் சட்டங்கள்?

அந்த நாட்டில் பின்பற்றப்படும் இஸ்லாம், புராட்டஸ்டன்டிசம், கத்தோலிக்கம், இந்து மதம், பௌத்தம் மற்றும் கன்பூசியனிசம் ஆகிய மதங்களின் மையக் கோட்பாடுகளை மீறுவது குற்றம் என ஏற்கெனவே இருந்த சட்டத்தை விரிவுபடுத்தியிருக்கிறது.

Antony Ajay R

தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா பல சர்ச்சைக்குரிய சட்டங்களை கடந்த செவ்வாய் அன்று இயற்றியுள்ளது.

இதனால் இந்தோனேசிய மக்கள் மட்டுமல்லாமல் சர்வதேச நாடுகளும், மனித உரிமை இயக்கங்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த சட்டத் திருத்தங்களில் திருமணம் செய்வதற்கு முன் உடலறவு கொள்வது குற்றம் போன்றவை ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டவையே என்றாலும் இந்த பிற்போக்கு நடவடிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இந்த சட்டங்கள் அங்கு வாழும் வெளிநாட்டவருக்கும் பொருந்தும் என இந்தோனேசியா அறிவுறுத்தியிருக்கிறது.

அந்த நாட்டில் பின்பற்றப்படும் இஸ்லாம், புராட்டஸ்டன்டிசம் (Protestantism) கத்தோலிக்கம் (Catholicism), இந்து மதம், பௌத்தம் மற்றும் கன்பூசியனிசம் ஆகிய மதங்களின் மையக் கோட்பாடுகளை மீறுவது குற்றம் என ஏற்கெனவே இருந்த சட்டத்தை விரிவுபடுத்தியிருக்கிறது.

கம்யூனிஸம் கூடாது

மார்க்சிஸ்ட்-லெனினிச சித்தாந்தத்தைப் பின்பற்றும் அமைப்புகளுடன் தொடர்புகொள்பவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

கம்யூனிசத்தைப் பரப்புவது பெரும் குற்றமாக கூறியுள்ளது இந்தோனேசியாவில் புதிதில்லை.

நீண்ட காலமாகவே இந்தோனேசிய அரசின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாக கம்யூனிச எதிர்ப்பு இருந்து வருகிறது.

1965-66 ல், இராணுவ சர்வாதிகாரி சுஹார்டோ தலைமையிலான இந்தோனேசிய அரசாங்கம் கம்யூனிஸ்ட்டுகள், முற்போக்குவாதிகள், தொழிற்சங்கவாதிகள், சீனர்கள் மற்றும் நாத்திகர்கள் மீது அழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டார்.

இதில் மொத்தமாக 10 லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர்.

அதுவரை உலகில் மிகப் பெரிய கம்யூனிச அமைப்புகளில் ஒன்றாக இருந்த இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி சுவடே இல்லாமல் அழிந்து போனது குறிப்பிடத்தக்கது.

இந்த கம்யூனிச அழிப்பு நடவடிக்கைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் உதவியது குறிப்பிடத்தக்கது.

கருகலைப்புத் தடை

கருகலைப்புக் குறித்து ஏற்கெனவே இருந்த தடையை நீட்டிப்பு செய்துள்ளனர். அத்துடன் பாலியல் வன்புணர்வால் கருவுற்றவர்கள் மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் பெண்களுக்கு கருகலைப்புக்கு அனுமதி அளித்துள்து. குழந்தை உருவான 12 வாரங்களுக்குள் செய்துகொள்ள வேண்டும்.

மரண தண்டனை குறித்த சட்டதிலும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மரண தண்டனையை நீக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணையம் சர்வதேச அளவில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தாலும் இந்தோனேசியாவின் புதிய திருத்தம் மரண தண்டனையை பாதுகாக்கிறது.

ஆனால் இப்போது 10 ஆண்டுகள் சிறையில் நன்னடத்தையுடன் இருந்தால் மரண தண்டனை மாற்றப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

திருமணத்துக்கு முன்னான உறவு

திருமணத்துக்கு முன்னர் உடலுறவுகொள்வதனை குற்றமாக கருதியுள்ளது புதிய சட்டத்திருத்தங்கள்.

திருமணம் தாண்டிய உறவில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு ஆண்டு அல்லது ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பையும் இந்த சட்டம் மறுப்பதனால் இதற்கு எதிராக போராட்டஙள் எழுந்துள்ளன.

ஏற்கெனவே இந்த சட்டம் 2019ம் ஆண்டும் அறிவிக்கப்பட்ட போது வெடித்த போராட்டங்களினால் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த சட்டத்திருத்தத்தினால் இந்தோனேசியாவின் முக்கிய வருமானமான சுற்றுலாத்துறை வெகுவாக பாதிக்கப்படும் என கூறுகின்றனர்.

இந்த சட்டங்களுடன் இந்தோனேசிய ஜனாதிபதி உள்ளிட அரசாங்க தலைவர்களை அவமதிக்கும் விதமாக பேசுவதையும் தண்டணையாக கருதியுள்ளனர்.

விமர்சனம் மற்றும் அவமதிப்புக்கு இடையிலான வரையறைகளை வகுத்திருப்பதாகவும் இந்தோனேசியா அரசு தெரிவித்துள்ளது.

இந்த சட்டங்கள் டிசம்பர் 15ம் தேதிக்குள் முழுவதுமாக நடைமுறைக்கு வந்து விடும். சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இந்த சட்டத்திருத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றன.

இந்தோனேசியாவிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?