வுஹான் மாகாணத்தின் ஆய்வகத்திலிருந்து தான் கொரோனா பரவியது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது சீனா. மேலும், இதனை அமெரிக்கா அரசியலாக்க பார்க்கிறது என தெரிவித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு பிற்பகுதியில், சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு பெருந்தொற்றாக மாறியது. இரண்டு ஆண்டுகள் உலகையே புறட்டிப்போட்டது. பல்லாயிரம் மக்கள் உயிரிழந்தனர்.
சீனாவின் வூஹான் பரிசோதனை மையத்தில் இருந்து தான் வைரஸ் தொற்று பரவியது என்ற தோராயமான கணிப்பு பரவலாக வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு ஆதாரங்கள் இல்லை என்பதால் உறுதிசெய்யப்படவில்லை.
மேலும் இந்த பெருந்தொற்றை முன்பே கணித்தார் கண் மருத்தவர் லீ வென்லியாங். கொரோனா வைரஸ் எந்த விதமான பாதிப்பையும் உண்டாக்கும் முன், எச்சரிக்கை மணி அடித்தவர்.
இந்நிலையில், வூஹான் ஆய்வகத்தில் நடந்த சிறிய விபத்து காரணமாகவே கொரோனா பரவல் ஏற்பட்டது என அமெரிக்காவின் மின்சக்தி அமைப்பு நடத்திய சமீபத்திய ஆய்வில் உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த குற்றச்சாட்டை சீனாவின் வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் மாவோ நிங் மறுத்துள்ளார். மேலும், இது அறிவியல் தொடர்பானது எனவும் அமெரிக்கா இதனை அரசியலாக்கப் பார்க்கிறது எனவும் சீனா தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு நடத்திய விசாரணையில் கொரோனா வைரஸ் ஒரு ஆய்வகத்தில் உருவாகியிருப்பது மிகவும் சாத்தியமற்றது (extremely unlikely) என தெரிவித்ததையும், மேற்கோள்காட்டினார் மாவோ நிங்.
எனினும், உலக சுகாதார அமைப்பின் இந்த அறிக்கையை உலக நாடுகள் ஏற்க மறுத்தன. சீனா இந்த விசாரணையை தடுத்ததாகவும், நிபுணர்கள் மூலத் தகவலை அணுகுவதை சீனா தடை செய்ததாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அமெரிக்காவின் இந்த ஆய்வறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust