நியூயார்க்கில் இறந்த மனித உடலை இயற்கை உரமாக மாற்றும் முறைக்கு ஒப்புதல் அளித்துள்ளனர். இதனால் மனித உரமாக்கல் சட்டத்தை அங்கீகரித்த அமெரிக்காவின் ஆறாவது மாநிலமாக நியூயார்க் மாறியுள்ளது.
இறந்த உடலை புதைப்பதற்கு அல்லது தகனம் செய்யும் முறைக்கு மாற்றாகவும், சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும் இந்த செயல்முறை உள்ளது. இது டெர்மேஷன் என்று அழைக்கப்படுகிறது.
அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் முதன்முதலில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறந்த மனிதனை மண்ணாக மாற்றும் நடைமுறைக்கு ஒப்புதல் அளித்தது அமெரிக்காவில் அவ்வாறு செய்த முதல் மாநிலமாக மாறியது.
அதன் பிறகு கொலராடோ மற்றும் ஓரிகான் 2021 இல் அதை சட்டப்பூர்வமாக்கியது. வெர்மான்ட் மற்றும் கலிபோர்னியா 2022 இல் ஒப்புதல் அளித்தன.
இந்த நடைமுறையின்படி, ஒரு கட்டையால் செய்யப்பட்ட கன்டெய்னரில் இறந்துபோன மனிதனின் சடலம் வைப்படுகிறது. அந்த சடலம் மரத்துகள்கள், புற்கள், செடி, கொடிகள் ஆகியவற்றால் மூடப்படுகிறது.
இது வளமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த மண்ணாக மாற்றுவதற்கான செயல்முறையை விரைவுபடுத்த பயன்படுகிறது. பின்னர் ஒரு மாதம் கழித்து அந்த கண்டெய்னர் சூடேற்றப்படும். இந்த செயல்முறைகளுக்கு (process) பிறகு, அந்த உடல் மண்ணாகவே மாறிவிடும்.
இந்த மண் சாதாரண மண்ணை விட பல மடங்கு உரம் மிக்கதாக இருக்கும். இறந்த மனிதரின் குடும்பத்தினருக்கு, அந்த மண்ணை கொடுக்கலாம் அல்லது அரசாங்கமே அந்த மண்ணை எடுத்து மரங்களுக்கு உரமாக பயன்படுத்தலாம்.
ஆரம்பத்தில், இந்த நடைமுறைக்கு மக்கள் ஆதரவு கொடுக்கவில்லை. ஆனால், தற்போது புதைப்பது, எரிப்பதை விட இந்த நடைமுறை சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக இருக்கிறது என இதற்கு மக்கள் மாறி வருகின்றனர்.
இதனால் அமெரிக்காவிலேயே அடுத்தடுத்து 5 நகரங்கள் இந்த நடைமுறைக்கு ஒப்புதல் அளித்துள்ளன. தற்போது இந்த வரிசையில் நியூயார்க்கும் இணைந்துள்ளது. இனி எதிர்காலத்தில் உலகம் முழுவதும் இந்த நடைமுறைக்கு மாறிவிடும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust