நியூசிலாந்து: தனி தீவில் இருக்கும் உலகிலேயே தனிமையான மரம் - எப்படி வந்தது?  Twitter
உலகம்

நியூசிலாந்து: தனி தீவில் இருக்கும் உலகிலேயே தனிமையான மரம் - எப்படி வந்தது?

இந்த தீவில் சிட்கா மரத்தைத் தவிர வேறு மரங்கள் இல்லை. இதன் அருகில் உள்ள மற்றொரு மரம் 220 கிலோ மீட்டர் தொலைவில் ஆக்லாந்து தீவில் தான் உள்ளது. இதே வகையான சிட்கா மரம் (Sitka spruce) பசிபிக் பெருங்கடலுக்கு மறுபக்கம் பூமியின் மற்றொரு அரைக்கோளத்தைக் கடந்துதான் இருக்கிறது.

Antony Ajay R

நியூலாந்தில் உள்ள கேம்பெல் தீவில் ஒரே ஒரு சிட்கா மரம் இருக்கிறது. இந்த தீவு நியூசிலாந்தின் பெரும் நிலப்பரப்பில் இருந்து 600 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

இந்த தீவில் சிட்கா மரத்தைத் தவிர வேறு மரங்கள் இல்லை. இந்த மரத்துக்கு உலகிலேயே தனிமையான மரம் என்ற சிறப்பு உள்ளது. இதன் அருகில் உள்ள மற்றொரு மரம் 220 கிலோ மீட்டர் தொலைவில் ஆக்லாந்து தீவில் தான் உள்ளது.

இதே வகையான சிட்கா மரம் (Sitka spruce) பசிபிக் பெருங்கடலுக்கும் மறுபக்கம் பூமியின் அரைக்கோளத்தைக் கடந்துதான் இருக்கிறது. திருவிழாவில் தொலைந்த குழந்தை ரயிலேயேறி வெளிநாட்டுக்கு வந்தது போல இவ்வளவு தன்னந்தனியாக இந்த மரம் எப்படி இந்த தீவை வந்தடைந்தது?

கேம்பெல் நியூசிலாந்தின் தெற்கு கோடியில் இருக்கும் ஒரு தீவாகும். இந்த பகுதி முழுவதும் ஆக்ரோஷமாக மேற்கு காற்று வீசும். இந்த காற்று எந்த செடியையும் மரத்தையும் சில அடிகளுக்கு மேல் வளர விடாது. 

இங்கு உறைய வைக்கும் பனி இல்லை என்றாலும் இதமான காலநிலை என்பது கிடையாது. வெப்பநிலை அரிதாகவே 10 செண்டிகிரேடுக்கு மேல் உயரும். 

எல்லா நாளும் மேக மூட்டமாகவும் மழையாகவும் இருக்கும். ஆண்டில் 40 நாட்கள் மட்டுமே மழை இல்லாமல் இருக்கும். ஆண்டில் 600 மணிநேரம் தான் சூரிய வெளிச்சம் இருக்கும். அதாவது ஒரு நாளுக்கு 2 மணி நேரம்.

இந்த கடினமான நிலையில் மெகாஹெர்ப்ஸ் என்று அழைக்கப்படும் மூலிகைகள் மட்டுமே இங்கு வளர்கின்றன. சிட்கா மரங்கள் இந்த சுற்று வட்டாரத்தில் வளர்ந்ததே இல்லை. 

சாதாரண வளர்ந்த சிட்கா மரம்

ஏன், பூமியின் தெற்கு அரைக்கோளத்திலேயே இந்த சிட்கா மரம் கிடையாது. வட அமெரிக்காவின் மேற்கு கடற்கரை ஓரத்தில் மட்டுமே இந்த மரம் பூர்வீகமாக வளரும்.

லார்ட் ரன்ஃபர்லி என்ற பிரிட்டிஷ் பிரபு நியூசிலாந்தை ஆட்சி செய்த போது (1897-1904) இந்த தீவில் சிட்கோ மரத்தை நட்டுவைத்ததாக கூறப்படுகிறது. 

பிரிட்டிஷ் மியூசியத்துக்காக பறவைகள் மாதிரியை சேகரிக்க நியூசிலாந்தின் தெற்கு தீவுகளில் சுற்றியழைந்தபோது அவர் இந்த தீவுக்கு வந்துள்ளார். 

தீவில் அவர் நட்ட மரம் இயற்கையில் கருணையால் வளர்ந்தது என்று தான் கூற வேண்டும். ஆனால் ஒரு சாதாரண சிட்கா மரத்தைப் போல இது வளரவில்லை. 

ஒரு சாதாரண சிட்கா மரம் 60 மீட்டர் வரை வளரும். ஆனால் இங்குள்ள இந்த மரத்தின் உயரம் 10 மீட்டர் தான். 100 ஆண்டுகளுக்கும் மேலாக தனிக்காட்டு ராஜாவாக அந்த மரம் வளர்ந்து நிற்கிறது. 

1958ம் ஆண்டுக்கு பிறகு இந்த மரத்தை அதன் தண்டுகளை வெட்டி பாதுகாத்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?