விஜய பிரியா நித்யானந்தா Newssense
உலகம்

கைலாசா சார்பாக ஐநாவில் பேசிய விஜய பிரியா நித்யானந்தா - யார் இவர்? பின்னணி என்ன?

NewsSense Editorial Team

சில வாரங்களுக்கு முன் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில், காவி உடை அணிந்திருந்த பெண் ஒருவர் நல்ல சரளமான ஆங்கிலத்தில் பேசினார்.

அவர் தலையில் ஜடா முடியும், நெற்றியில் இந்திய பெண்கள் வைத்துக் கொள்வது போல குங்குமத் திலகமும், கழுத்து முழுக்க ருத்ராட்ச மாலை மற்றும் தங்க நகைகள் அணிந்திருந்தார்.

அவர் யார் என்னவென சபையில் இருந்தவர்களுக்கு சட்டென புரியவில்லை. சில தினங்களுக்கு முன்பு தான், அவர் நித்தியானந்தாவின் பிரதிநிதியாக ஐநா சபையின் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார் என்பதும், அவர் பெயர் விஜய பிரியா நித்யானந்தா என்பதும் தெரியவந்துள்ளது.

நித்தியானந்தா தொடர்பான பிரச்னைகள் & சர்ச்சைகள்:

தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த சாமியார் நித்தியானந்தா. ஒரு கட்டத்தில் கர்நாடக மாநிலத்தில் பிடதி என்கிற இடத்தில் மிகப் பெரிய ஆசிரமத்தை அமைத்து மிகுந்த செல்வாக்கோடு வாழ்ந்தார். அவருடைய ஆன்மீகச் சொற்பொழிவுகளைக் கேட்டு, ஆயிரக் கணக்கில் வெளிநாடுகளிலிருந்தெல்லாம் பக்தர்கள் கூட்டம் கூடமாக வந்து சேர்ந்தனர்.

2010 - 11 ஆண்டு வாக்கில், நித்யானந்தா ஒரு பிரபல சினிமா நடிகை உடன் உல்லாசமாக இருப்பது போன்ற காணொளி வெளியானது, ஒட்டுமொத்த ஆன்மீக அன்பர்கள் வட்டாரத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

அதனைத் தொடர்ந்து மற்றொரு பெண்ணையும் நித்யானந்தா வன்புணர்ந்ததாகச் செய்திகள் வெளியாயின. 2019ஆம் ஆண்டு வாக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரின் 3 பெண் குழந்தைகளை நித்தியானந்தா கடத்திவிட்டதாக, அக்குடும்பத்தினர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் புகாரளித்தனர்.

அவருக்கு எதிராக பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்து பல மாநில காவல்துறையினர் விசாரித்து வந்தனர். அந்த வழக்குகளை எல்லாம் முறையாக எதிர்கொண்டு தான் நிரபராதி என இந்திய சமூகத்தில் நிரூபிப்பதற்கு பதிலாக, 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதவாக்கில் இந்தியாவிலிருந்து தப்பி தலைமறைவானார் நித்தியானந்தா.

சுமார் 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில், தனக்கென தனியே கைலாசா என்கிற நாட்டை உருவாக்கி இருப்பதாக அரிவித்தார். அவர் எங்கு இருக்கிறார்? என்ன ஆனார்? அவரை ஏன் இந்திய முகமைகளால் நெருங்க கூட முடியவில்லை?... என பல கேள்விகளுக்கு விடை தெரியவில்லை.

ஆனால் இந்தியாவிலிருந்து தப்பிச்சென்று கைலாசாவை உருவாக்கிய சாமியார் நித்தியானந்தா, கூடிய விரைவில் கைலாச நாட்டில் மற்றவர்கள் குடியேற ஏற்பாடுகள் செய்யப்படும் என அவர் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால், இதுநாள் வரை அப்படி கைலாசா என்கிற நாடு இருப்பதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை. அப்படியே இருந்தாலும், அது எங்கு இருக்கிறது? எந்த நாட்டுக்கு அருகில் இருக்கிறது என்கிற விவரங்கள் தெரியவில்லை.

ஆனால் தொடர்ந்து சொற்பொழிவு நடத்துவது, தன் கருத்துக்களை வெகுஜன மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது, பலருக்கும் விருதுகளைக் கொடுப்பது என அவ்வப்போது இணையத்தில் தோன்றி அதகளப்படுத்தி வருகிறார் நித்யானந்தா. சமீபத்தில் மதுரை மாநகரில் நடந்த திருவிழா ஒன்றில் கூட, பக்தர்களுக்கு பிரசாதத்தை விநியோகிக்க சொல்லி மக்கள் மனதில் மீண்டும் சிக்ஸ் அடித்தார்.

ஐநாவில் நித்தியானந்தாவின் குரல்:

இப்போது அதையெல்லாம் தாண்டி ஐநா சபையிலேயே தன் கருத்தை பதிவு செய்யும் அளவுக்கு உயர்ந்து இருக்கிறார் நித்தியானந்தா. தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்திலேயே, கைலாசா நாட்டின் அதிகாரிகள், ஐநா சபைக்குச் சென்றுள்ளதாக பதிவிட்டிருக்கிறார்.

கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி, ஐக்கிய நாடுகள் சபை “ 19 ஆவது பொருளாதார சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் மாநாடு” கூட்டத்தை நடத்தியது. அக்கூட்டத்தில் அவை உறுப்பினர்கள் பேசும் நேரத்தில் நித்தியானந்தா தரப்பிலிருந்து எவரும் எதையும் பேசவில்லை.

ஆனால், பொதுமக்களுக்கான நேரத்தில், தாங்கள் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசாவில் இருந்து வந்திருப்பதாகச் சொல்லி, நித்தியானந்தாவின் சீடர்களில் இருவர் பேசியுள்ளதாக இந்தியா டுடே வலைதளம் குறிப்பிடுகிறது.

நித்யானந்தா : சூரியனையே உதிக்க விடாமல் காக்க வைத்த இவருக்கு இப்போது என்ன ஆனது?

என்ன பேசினார் விஜய பிரியா நித்யானந்தா? ஐநா தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கம் என்ன?

யார் இந்த விஜயப் பிரியா?

அப்படி, ஐநா சபையில் பேசியவர்களில் ஒருவர் தான் விஜய் பிரியா நித்தியானந்தா. இவர் ஐக்கிய நாடுகள் சபைக்கான கைலாச நாட்டின் நிரந்தர தூதர் என அதிகாரப்பூர்வ கைலாச முகநூல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. விஜய் பிரியாவோ, தான் வாஷிங்டன் டிசி நகரத்தில் வசிப்பதாகக் கூறியுள்ளார்.

ஐநா சபைக் கூட்டத்தில், இவர் மட்டுமின்றி, கைலாசா நாட்டின் முதன்மை அதிகாரி முக்திகா ஆனந்த், கைலாசாவின் செயிண்ட் லூயிஸ் தலைவர் சோனா காமத், கைலாசாவின் பிரிட்டன் தலைவர் நித்ய ஆத்மதாயகி, கைலாசாவின் பிரான்ஸ் தலைவர் நித்ய வெங்கடேசானந்தா, கைலாசாவின் ஸ்லொவேனியா தரப்பிலிருந்து மா பிரியம்பரா நித்யானந்தா இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

விஜயப் பிரியாவின் குற்றச்சாட்டு:

தன்னுடைய ஆன்மீகக் குருவான நித்தியானந்தா அவர்கள், இந்தியாவில் இந்து பாரம்பரியத்தை மீட்டெடுப்பதற்காக தொடர்ந்து துன்புறுத்தப்படுவதாக கூறினார்.

தவத்திரு நித்யானந்தா அவர்கள் மற்றும் அவரை நம்பி கைலாசாவில் வாழும் சுமார் 2 கோடி இந்துக்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க, தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கேள்வி எழுப்பினார் விஜயப் பிரியா நித்யானந்தா.

அவர்கள் இருவரின் கருத்துக்களையும் ஐக்கிய நாடுகள் சபை, கருத்தில் கொள்ளப்படாது என ஐநா தரப்பிலிருந்து கடந்த புதன்கிழமை தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இந்தியா டுடே வலைதளக் கட்டுரை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?