சீனா: திருமணம் மீறிய உறவில் இருந்தால்... ஊழியர்களுக்கு கரார் கண்டிஷன் போட்ட நிறுவனம்- ஏன்? canva (rep)
உலகம்

சீனா: திருமணம் மீறிய உறவில் இருந்தால்... ஊழியர்களுக்கு கறார் கண்டிஷன் போட்ட நிறுவனம்- ஏன்?

Keerthanaa R

ஒவ்வொரு நிறுவனமும் தனிப்பட்ட விதிமுறைகளை பின்பற்றும்.

இவை அங்கு வேலை செய்யும் ஊழியர்களின் நலனுக்காகவும், நிறுவனத்தின் உற்பத்தி திறனின் நலனுக்காகவும் வகுக்கப்படுகிறது.

இந்த விதிமுறைகள் சில எல்லா நிறுவனங்களுக்கும் பொதுவானதாகவும், சிலவை மாறுபட்டும் இருக்கும்.

ஆனால், அந்த விதிமுறைகள் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடாத வண்ணம் இருக்கவேண்டும் என்பதே ஒரு பொதுவான எதிர்பார்ப்பாக இருக்கிறது

அப்படி இந்த சீன நிறுவனம் வகுத்திருக்கும் விதிமுறையானது சற்றே நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

செஜியாங் பகுதியை அடிப்படையாக கொண்ட இந்த நிறுவனம் அதன் ஊழியர்கள் திருமணம் மீறிய உறவில் இருந்தால் அவர்களை பணி நீக்கம் செய்துவிடுவோம் என எச்சரித்துள்ளது.

நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து திருமணமான ஊழியர்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும், மேலும், ஜூன் 9ஆம் தேதி முதல் இந்த விதிமுறை அமல் செய்யப்பட்டுள்ளது.

நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"நிறுவனத்தின் உள் நிர்வாகத்தை வலுப்படுத்தவும், குடும்பத்தாரிடம் உண்மையாக இருக்கவும், கணவன் மனைவிக்கு இடையில் அன்பை மேம்படுத்தவும், குடும்பத்தை நன்றாக பாதுகாக்கவும், வேலையில் கவனம் செலுத்தவும், திருமணம் மீறிய உறவி இருப்பது போன்ற தீய பழக்கங்களில் ஈடுபட அனைத்து ஊழியர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறையை மீறுபவர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள். அனைத்து ஊழியர்களும் சரியான அன்பின் மதிப்புகள் கொண்டு நல்ல ஊழியர்களாக இருப்பார்கள் என்று நம்புகிறோம்" என்று இருந்தது.

4 Noக்களையும் பட்டியலிட்டிருக்கிறது நிறுவனம்

  • No Extramarital affair

  • No Mistress

  • No Illicit Relationship

  • No Divorce

இந்த விநோத விதிமுறையை அவர்கள் அறிமுகப்படுத்த என்ன காரணம் என்பது தெரியவில்லை.

ஆனால், சவுத் சைனா போஸ்ட்டில் அறிக்கை ஒன்று வெளியானது. அதில் சீனாவின் ஒரு எண்ணெய் நிறுவனத்தில் பணியாற்றும் மேலதிகாரி ஒருவர், பெண்ணின் கைகளை பிடித்திருக்கும் புகைப்படங்கள் ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவியதன் தொடர்ச்சியாக பணியில் இருந்து அகற்றப்பட்டார். அப்பெண் அவரது மனைவி அல்ல!

இது ஊழியர்களின் பணி உற்பத்தி திறன் (Productivity) மீது கவனம் செலுத்தவும், குடும்பங்களோடு பிணைப்பை ஏற்படுத்தவும் உதவும் என நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் கூறியுள்ளார்.

ஆனால் வழக்கறிஞர் சென் டாங் சீனாவில் ஒருவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றால் அவர் அந்த வேலை தகுதியானவர் அல்ல என்ற காரணம் இருந்தால் மட்டும் தான் சாத்தியம் எனவும் கூறியுள்ளார்.

இந்த விதிமுறையானது கலவையான விமர்சனங்களை பெற்றுவந்தாலும் வித்தியாசமான நடவடிக்கைகளை மேற்கொள்வது சீனாவுக்கு ஒன்றும் புதிதல்லவா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?