உக்ரைன் பிரதமர்

 

Twitter

உலகம்

உக்ரைன் : வேடிக்கை பார்க்கும் உலக நாடுகள் - என்ன நடக்கிறது ?

Antony Ajay R

“ரஷ்யாவின் தாக்குதலில் நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம். எங்களுக்காக யாரும் வரவில்லை. இரண்டாவது நாளாக நாங்கள் தன்னந்தனியாக போராடி வருகிறோம். எந்த நாடும் எங்களுக்கு உதவவில்லை, இதுவரை 137 பேரை இழந்திருக்கிறோம். உலக நாடுகள் வேடிக்கை பார்க்கின்றன. எங்களுக்கு உலக நாடுகள் உதவ வேண்டும்” என மீண்டும் வேதனை தெரிவித்திருக்கிறார்.


நேற்று அதி காலை தொடங்கி இப்போது வரை ரஷ்ய உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட வீரர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். இராணுவ தளவாடங்கள், விமான கட்டமைப்புகள் என ஒவ்வொன்றாகக் கைப்பற்றி தற்போது தலை நகர் கீவ்-ல் ஊடுருவிக்கொண்டிருக்கிறது ரஷ்ய இராணுவம். இந்நிலையில் உக்ரைன் அதிபர் வெளியிட்ட உருக்கமான பேச்சு வெளியாகியிருக்கிறது.

War

"எங்கள் தேசத்தைப் பாதுகாப்பதில் நாங்கள் தனித்துவிடப்பட்டுள்ளோம். எங்களுடன் நின்று போரிட யாருமில்லை. எங்களுக்கு நேட்டோ பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய யாரும் முன்வரவில்லை. எல்லோருக்கும் பயம். இதுவரை வீரர்கள், பொதுமக்கள் என எங்கள் தரப்பில் 137 பேர் இறந்துள்ளனர். 316 பேர் படுகாயமடைந்துள்ளனர். நானும் எனது குடும்பத்தினரும் இன்னும் கீவில் தான் இருக்கிறோம். ரஷ்யப் படைகளின் இலக்கு நாங்கள் தான் என்று தெரிந்தும் இங்கேயே இருக்கிறோம். பொதுமக்கள் ஊரடங்கை அமல்படுத்திக் கொண்டு பாதுகாப்பான இடங்களில் பதுங்கியிருக்குமாறு வேண்டுகிறோம். உக்ரைனை அரசியல் ரீதியாகச் செயலிழக்கச் செய்வதே ரஷ்யாவின் இலக்கு" என்று உக்ரைன் அதிபர் உருக்கமாகப் பேசியுள்ளார்.

ரஷ்யாவில் போராட்டக்காரர்கள்

நேற்று அமெரிக்க அதிபர், உக்ரைனுக்கு ஆதரவாகப் படைகளை அனுப்பப்போவதில்லை என்று தெரிவித்திருந்தார். ஆனால் ரஷ்யாவிற்கு எதிராகப் பொருளாதாரத் தடையை அமல்படுத்தியுள்ளார். நேட்டோ குழுமமோ, ரஷ்யா தனது படைகளை உக்ரைனிலிருந்து திரும்பப் பெற வேண்டும் என்று எச்சரித்ததோடு நிறுத்திக் கொண்டுள்ளது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், ரஷ்யா போரை நிறுத்த வேண்டும். நேட்டோவிடமும் அணு ஆயுதங்கள் இருக்கிறது என்பதை ரஷ்யா புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். உக்ரைன் அதிபர் கூறியுள்ளது போல் இதுவரை களத்தில் இறங்கி உக்ரைனுக்கு ஆதரவாக யாரும் சண்டையிடவில்லை.

உக்ரைன் மக்களைப் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்துவதைத் தவிர, வேறெதுவும் செய்ய முடியாத நிலையில் தவிக்கிறது உக்ரைன் அரசு

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?