மோடி மற்றும் புதின்

 

Twitter

உலகம்

Russia : "வரலாற்றில் எந்த பக்கம் நிற்க விரும்புகிறீர்கள்" - இந்தியாவுக்கு அமெரிக்கா கேள்வி

ரஷ்யா தாக்குதலால் உலக அளவில் பெட்ரோல் விலை ஏறியுள்ள நிலையில், ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

Antony Ajay R

இந்தியா ரஷ்யாவிடம்மிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை எதிர்க்கும் அமெரிக்கா, "ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது, ரஷ்யாவின் தாக்குதலை ஆதரிப்பதாகும்" என்று கூறியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த மாதம் 24ம் தேதி முதல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவுடன் போரிடுவது உலகப் போருக்கு வழிவகுக்கும் எனக் கருதும் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. அமெரிக்கா ரஷ்ய எரிபொருள்களுக்கும் தடை விதித்திருக்கிறது. இதனால் ரஷ்யா பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது.

சில தினங்களுக்கு முன்பு ரஷ்யாவில் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்திருந்தது. இது குறித்து ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியிருந்தார்.

Oil

தற்போது, ரஷ்யாவிடமிருந்து 35மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இந்தியா வாங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மிகவும் குறைக்கப்பட்ட விலையில் இந்த எண்ணெய் ஒப்பந்தம் நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது.கச்சா எண்ணெய்யை சரக்கு கப்பல் மூலம் இந்தியா அனுப்பி வைக்கும் பொறுப்பையும் ரஷ்யா ஏற்றுள்ளது.

இதனிடையே சர்வதேச சந்தையில் பெட்ரோல் விலை 100 டாலராக குறைந்துள்ளது.

ரஷ்யா தாக்குதலால் உலக அளவில் பெட்ரோல் விலை ஏறியுள்ள நிலையில், ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

ஜோ பைடன்

ஆனால், ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா எதிர்கிறது. வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி, "வரலாற்று புத்தகங்கள் எழுதப்படும் போது, நீங்கள் இந்த சூழலில் எந்தப்பக்கம் நிற்க விரும்புகிறீர்கள் என்று சிந்தியுங்கள். ரஷ்ய அரசை ஆதரிப்பது பேரழிவை ஏற்படுத்தும் அவர்களின் தாக்குதலை ஆதரிப்பதாகும்" என்று கூறியுள்ளார். இந்திய அரசாங்கம் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?