Nokia : 60 ஆண்டுகள் கழித்து லோகோவை மாற்றிய நிறுவனம் - ஏன் தெரியுமா? Twitter
உலகம்

Nokia : 60 ஆண்டுகள் கழித்து லோகோவை மாற்றிய நிறுவனம் - ஏன் தெரியுமா?

2020ம் ஆண்டு மிகப் பெரிய வீழ்ச்சியைக் கண்ட பின்னர் அந்த நிறுவனத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளார் சி.இ.ஓ. லுண்ட்மார்க்.

Antony Ajay R

பின்லாந்தை தலைமையகமாகக் கொண்ட நோக்கியா நிறுவனம் 90'ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட்.

நம்மில் பெரும்பாலானவருக்கு மொபைல் என்றாலே நோக்கியா தான் நினைவுக்கு வரும். குறிப்பாக மொபைலை ஆன் செய்யும் போது இரண்டு கைகள் கோர்பது போல வரும் சின்னம்.

60 ஆண்டுகள் புழக்கத்தில் இருந்த அந்த சின்னத்தை மாற்ற நோக்கியா நிறுவனம் முடிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளது.

அதிக நிறங்களைப் பயன்படுத்த வேண்டியதனால் நீல நிறத்தில் நோக்கியா என வரும் லோகோ பயன்பாட்டை நிறுத்தியுள்ளதாக முதன்மை நிர்வாக அதிகாரி பெக்கா லுண்ட்மார்க் அறிவித்துள்ளார்.

இன்று நடக்க இருக்கும் உலக மொபைல்கள் மாநாட்டை முன்னிட்டு அவர் இந்த கருத்தைப் பேசினார்.

2020ம் ஆண்டு மிகப் பெரிய வீழ்ச்சியைக் கண்ட பின்னர் அந்த நிறுவனத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளார் லுண்ட்மார்க்.

திருப்பி அமைத்தல் (Reset), முடுக்குதல் மற்றும் அளவிடுதல் என மூன்று கட்டங்களாக நிறுவனத்தை வளர்க்க திட்டமிட்டுள்ளார் லுண்ட்மார்க். இப்போது இரண்டாவது கட்டம் செயல்பட்டு வருகின்றதாகவும் கூறியுள்ளார்.

நோக்கியா நிறுவனம் தொலைத் தொடர்புத் துறையில் பழைய இடத்தைப் பிடிக்க கடுமையாக முயன்று வருகிறது.

இதற்காக பிற நிறுவனங்களுக்கு கியர்களை விற்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது நோக்கியா.

இந்திய சந்தையில் பல ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் மொபைல் நிறுவனமாக நோக்கியா இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?