13 பிப்ரவரி 2017. மலேசியாவின் பரபரப்பான கௌலா லும்பர் விமான நிலையம் இயங்கிக்கொண்டிருந்தது.
அங்கிருந்து மக்காவுக்கு செல்ல தயாராக இருந்த நீல போலோ சட்டையும் நீல ஜீன்ஸும் அணிந்திருந்த கொரிய நபரை யாரும் கண்டுகொண்டிருக்க மாட்டார்கள்.
அந்த நபர்தான் 2011ம் ஆண்டு வடகொரிய அரசின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட கிம் ஜாங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் (சித்தப்பாவின் மகன்).
தனது விமானத்தை சரிபார்த்தபடி இருந்த கிம் ஜாங் நம்முக்கு அருகில் ஒரு பெண் வந்து அவர் முகத்தில் எண்ணெய் மாதிரியான ஒரு திரவத்தை தெளித்து துடைத்துவிட்டுச் சென்றாள்.
அந்த பெண்ணின் நடவடிக்கைகள் சிசிடிவி கேமராவில் பதிந்தன. சிறிது நேரத்தில் அசைவின்றி இருந்த கிம் ஜாங் நம் அருகில் வந்த மற்றொரு பெண் அவரது கண்களையும் வாயையும் ஒருசேர மூடிவிட்டு மன்னிப்புக் கேட்டபடி நடந்து மறைந்தார்.
இந்த சம்பவம் நடந்த 20 நிமிடத்தில் கிம் ஜாங் உன் இறந்துவிட்டார். அவரது கொலைக் குற்றத்துக்காக அந்த பெண் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது தெளிக்கப்பட்டது வி.எக்ஸ் எனப்படும் உலகின் மோசமான வேதியல் ஆயுதம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆயுதம் நரம்பு மண்டலத்தை பதித்து உடனடியாக மரணத்தை ஏற்படுத்தக் கூடியது.
கொலைச் சம்பவம் வெற்றிகரமாக நடைபெற்றதை சுற்றியிருந்த கொரிய ஏஜெண்ட்கள் உறுதி செய்தனர். ஆம், அந்த விமானத்தில் பொதுமக்களுடன் டிக்கெட் எடுத்தபடி, டிக்கெட்டை சரிபார்த்தபடி, காபி அருந்தியபடி, செய்திதாள் வாசித்தபடி, மொபைலில் மெஸ்ஸெஜ் அனுப்பியபடி சாதாரணமாக நின்றுகொண்டிருந்த பெரும்பாலானோர் கொரிய ஏஜெண்ட்கள் தான் எனக் கூறப்படுகிறது.
இந்த திட்டத்தில் தவறு ஏற்பட்டால் அடுத்ததாக அவரைக் கொலை செய்ய பல திட்டங்கள் இருந்ததாகவும் சொல்கின்றனர்.
கொரிய அரச வம்சத்து நபரான, சில நாட்களுக்கு முன்வரை கொரியாவின் தலைவர் பதவிக்கு சரியானவராக பேசப்பட்டவர் இப்படி ஜேம்ஸ் பாண்ட் படத்தில் வருவது போல விமான நிலையத்தில் கொல்லப்பட்டதை இப்போது தான் அறிகிறீர்கள் என்றால் வியப்பாக இருக்கும்.
இந்த படுகொலையின் பின்னணி என்ன? இதன் அடுத்தடுத்து நடந்தது என்ன என்பதைப் பார்க்கலாம்...
கொலை நடந்துமுடிந்ததும் கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக விமான நிலையத்தில் இருந்த அனைத்து கொரிய ஏஜெண்ட்களும் சோதனைச் சாவடிகளைக் கடந்து விமானங்களில் ஏறி தங்களது நாட்டுக்குச் சென்றனர். அவர்கள் சென்ற விமானம் பியாங்யாங் செல்லும் வரை தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.
கொரிய அரசை அச்சுறுத்தும் ஒருவருக்கு முடிவுகட்ட சர்வதேச விமானநிலையத்தில் இப்படி ஒரு படுகொலையை நடத்தவும் வட கொரியா தயங்காது என உலகுக்கு உரைத்தது அந்த கொலைச் சம்பவம்.
கொலைக்கான விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணைக்கு அழைக்கப்பட்ட இருவரும் கொரிய ஏஜெண்ட்கள் இல்லை. மாறாக, இந்தோனேசியாவைச் சேர்ந்த சிட்டி ஐஸ்யா மற்றும் வியட்நாமைச் சேர்ந்த டோன் தி ஹுவாங் ஆகிய இரு முன்னாள் காவலர்கள்.
இந்த இரண்டு பெண்களும் தங்களை அறியாமலேயே கொலையில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
இருவரும் ஒரு யூடியூப் சேனலுக்காக பிரான்க் வீடியோ எடுப்பதாகக் கூறி தங்களை இதனைச் செய்ய வைத்ததாக மலேசிய காவல் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
விசாரணையில் மார்ச் மாதம் சிட்டி ஐஸ்யாவுக்கும் கொலைக்கும் துளியும் சம்பந்தமில்லை என உறுதியானதால் அவர் விடுவிக்கப்பட்டார்.
ஆபத்தான வேதிப்பொருளை கையாண்ட டோன் தி ஹுவாங் மட்டுமே ஒரே குற்றவாளியாக இருந்தார். அவருக்கு குறைந்தபட்ச தண்டனையாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.இருந்தாலும் 2019ம் ஆண்டு வரை சட்டப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டு அவரும் விடுவிக்கப்பட்டார்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு வடகொரியா மற்றும் மலேசியாவுக்கு இடையிலான உறவுகள் விரிசல் கண்டது. மலேசியா கிம் ஜாங் நம்மின் உடலை பியாங்யாங்குக்கு அனுப்ப மறுத்தது. வடகொரிய தூதுவரை வெளியேற்றியது. பதிலுக்கு வடகொரியா நாட்டில் உள்ள அனைத்து மலேசிய மக்களையும் பணயக்கைதியாக்குவதாக மிரட்டியது...
அடுத்தடுத்த சம்பவங்களால் இரண்டு நாட்டுக்குமிடையிலான உறவு முற்றிலுமாக முறிந்தது. 2020ம் ஆண்டு மலேசியா வட கொரியாவுக்கான தூதரகத்தை மீண்டும் திறக்க முன்வந்தது. ஆனால் மலேசியாவில் எழுந்த அரசியல் நெருக்கடி காரணமாக அது நடைபெறவில்லை.
கிம் ஜாங் உன்னின் சகோதரரான கிம் ஜாங் நம் கொலைக்கு வட கொரிய அரசு அதாவது கிம் ஜாங் உன் தான் காரணம் எனக் கூறப்படுகிறது.
இரண்டாம் உலகப்போருக்கு பிறகு 1948ம் ஆண்டு, கிம் வம்சத்தை வடகொரியாவின் ஆட்சியாளராக நிறுவியவர் கிம் II-சங்.
1994ம் ஆண்டு அவரது மறைவுக்கு பிறகு மகன் கிம் ஜாங்-இல் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். திறமையாக ஆட்சி செய்த இவர் 2011ம் ஆண்டு மறைந்தார்.
இவரது மறைவுக்கு பிறகு இளம் வயது தலைவராக பொறுப்பேற்றார் கிம் ஜாங்-உன். தனது தாத்தா அல்லது அப்பாவைப் போல மக்கள் மதிக்கும் படியான காரியங்களில் கிம் ஜாங் உன் அதிகமாக ஈடுபட்டதில்லை.
ஆட்சி செய்வதில் அவருக்கு அனுபமும் இல்லை என்பதால் தனது பதவியின் பாதுகாப்பு குறித்து அஞ்சினார் என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
கிம் ஜாங்-உன்னுக்கு மக்கள் செல்வாக்கும் கூட கிடையாது. இதனால் மக்கள் செல்வாக்குடனும் பிற நாடுகளில் நண்பர்களையும் கொண்டிருந்த அவரது உறவினரான ஜாங் சாங்-தேக் அவருக்கு அச்சுறுத்தலாக திகழ்ந்தார்.
ஜாங் சாங்-தேக்குக்கு பக்கபலமாக மலேசியாவில் இருந்தவர் அவரது மறுமகன். இந்த இருவருடன் கிம் ஜாங்-நம் தொடர்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
2013ம் ஆண்டு கொரிய அரசு ஜாங் சாங்-தேக்கை கைது செய்து சிறையில் அடைத்தது. பின்னர் மரணதண்டனையும் வழங்கியது (கொலை செய்தது).
அடுத்த மாதத்தில் அவரது மறுமகனும் பியாங்யாங்கில் அரசால் கொலை செய்யப்பட்டார். மீதமிருந்தது கிம் ஜாங்-நம் மட்டுமே.
தனக்கு பக்கபலமாக இருந்த ஜாங் சாங்-தேக் மறைந்ததால் தனிமரமானார் கிம் ஜாங்-நம். இறுதிகாலத்தில் அரச வம்சத்தில் பிறந்த இவர் பணத்துக்கு கூட கஷ்டப்படும் நிலை வந்தது என சில அறிக்கைகளில் குறிப்பிடப்படுகிறது.
இறுதியாக 2017ம் ஆண்டு அவரும் கொலை செய்யப்பட்டார். வட கொரியாவைப் பொறுத்தவரை நீங்கள் அரச குடும்பத்தின் உறுப்பினர் என்றால் உங்களுக்கு பாதுகாப்பும், செல்வசெழிப்பும், மகிழ்ச்சியான வாழ்க்கையும் கிடைக்கும் என அர்த்தமில்லை...!
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust