வட கொரியா: கிம் ஜாங் உன் உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்துவது ஏன்? Twitter
உலகம்

வட கொரியா: கிம் ஜாங் உன் உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்துவது ஏன்?

Gautham

இந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் வடகொரியா ஜப்பானை நோக்கி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை ஏவியது அனைவருக்கும் நினைவிருக்கலாம். கடந்த 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு வடகொரியா இப்படி ஒரு ஏவுகணையை ஜப்பானை நோக்கி ஏவியது அதுவே முதல் முறை.

அதேபோல மற்ற பல பெலாஸ்டிக் ஏவுகணைகளை வடகொரியாவின் எல்லை ஓரத்தில் ஏவியது. பல போர் விமானங்கள் தென் கொரியாவின் எல்லையைத் தொட்டு வந்தன அல்லது எல்லையை ஒட்டி பறந்து வந்தன. சகட்டுமேனிக்கு ஆர்டிலரி குண்டுகளைக் கடலில் ஏவியது. 

இப்படி வடகொரியா ஏவிய பல குண்டுகள் தென்கொரியா மற்றும் வடகொரியாவுக்கு இடையில் ராணுவ பஃபர் சோன் (Military Buffer Zone) என்று அழைக்கப்படும் பகுதியில் விழுந்து விடுத்தது. 

ராணுவத்தில் பஃபர் சோன் என்பது இரு நாட்டுக்கு இடையிலான ஒரு குறிப்பிட்ட அளவிலான நிலப்பரப்பு, எந்தவித போர் நடவடிக்கைகளின்றி அமைதி கடைப்பிடிக்கப்படும் இடமே. இப்படிக் கடந்த 2018 ஆம் ஆண்டு வடகொரியா மற்றும் தென் கொரியா இணைந்து உருவாக்கிய பகுதியிலேயே இப்போது ஆர்டிலரி குண்டுமழை பொழிந்து வெடிக்கச் செய்திருக்கிறது வடகொரியா.

வடகொரியா மற்றும் தென்கொரியா நாடுகளுக்கு இடையிலான அமைதிக்காக சில பேச்சுவார்த்தைகளை அவ்வப்போது நடந்து வந்தாலும் இப்போதும் இரு நாடுகளும் போரில் தான் இருக்கின்றன.

கடந்த திங்கட்கிழமை ஒரு வடகொரியா நாட்டை சேர்ந்த வணிக கப்பல் அந்நாட்டின் கடல் எல்லையைத் தாண்டி தென்கொரியாவுக்குள் நுழைந்தது. தென்கொரியா இதை வேண்டுமென்றே நடத்தத் தாக்குதலாகவே பார்க்கிறது.

இந்த தாக்குதல்கள் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் என்ன செய்யவிருக்கிறார்? அவர் செயல்படுத்த விரும்புவது தான் என்ன? 

இதற்கு மூன்று விடைகள் கூறப்படுகின்றன. வடகொரியா தொடர்ந்து பல தரப்பட்ட ஏவுகணைகளை ஏவுவது, ஆயுத பரிசோதனைகளை மேற்கொள்வது...

1. தன்னுடைய ஆயுத தொழில்நுட்பத்தைப் பரிசோதிப்பது மற்றும் மேம்படுத்துவதற்கு

2. சர்வதேச அரங்கில் உலகிற்கு ஒரு அரசியல் செய்தியை (குறிப்பாக அமெரிக்காவுக்கு) கூறுவது

3. வடகொரிய மக்களிடம் தன் ஆளுமையைக் காட்டி கவர்வதற்கும் மக்களுக்கு வட கொரிய அரசாங்கத்தின் ஆட்சியின் மீதான நம்பிக்கையையும் விசுவாசத்தையும் அதிகரிப்பதற்கும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பிபிசி ஊடகம் பட்டியலிடுகிறது

ஆனால் இதில் எந்த ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகத் தொடர்ந்து ஏவுகணைகளை ஏவுகிறது என்பதை உறுதியாகக் கூற முடியவில்லை.

மறுபக்கம் வட கொரியாவின் அரசு ஊடகம், வடகொரியா மேற்கொள்ளும் இந்த ஏவுகணை சோதனைகள் மற்றும் ராணுவ பயிற்சிகள், அமெரிக்கா - தென்கொரியா - ஜப்பான் ஆகிய நாடுகளின் ஒருங்கிணைந்த ராணுவ பயிற்சிக்குக் கொடுக்கப்படும் பதிலடி எனக் கூறி வருகிறது. தங்களுடைய எதிரிகள் இராணுவ ரீதியில் பிரச்சனைகளைத் தீவிரப்படுத்துவதாக வடகொரியா குற்றம் சாட்டியுள்ளது. அதை எச்சரிக்கும் வகையில் தான் ஏவுகணைப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் வடகொரியத் தரப்பே கூறியுள்ளது.

அமெரிக்கா - தென்கொரியா - ஜப்பான் ஆகிய நாடுகள் கடந்த சில மாதங்களாகவே தனித்தனியாகவும் ஒருங்கிணைந்தும் பெரிய அளவில் ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. வடகொரியாவின் அணு ஆயுத தாக்குதல்களை எதிர்கொள்ள தாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதையே இந்த மூன்று நாடுகளின் ஒருங்கிணைந்த பயிற்சிகள் வெளிப்படுத்துவதாக அமைகின்றன.

மேற்கூறிய மூன்று நாடுகளின் ஒருங்கிணைந்த ராணுவ பயிற்சிகள் கிம் ஜாங் உன்னைத் தூண்டுவதாக அமைகிறதோ என்கிற ஒரு சிறு சந்தேகமும் எழாமல் இல்லை.

அடுத்த ஐந்து ஆண்டுக் காலங்களில் என்ன மாதிரியான ஆயுதங்களை எல்லாம் மேம்படுத்த வேண்டும் என, கிம் ஜாங் உன் கடந்த ஆண்டு  ஒரு திட்டத்தை வெளியிட்டார். அதில் போர்க்களத்தில் பயன்படுத்தக்கூடிய சிறிய அணுக்குண்டுகள் மற்றும் அந்த அணுக் குண்டுகளைக் குறைந்த தூரத்தில் உள்ள இலக்குகளைச் சென்று தாக்கும் ராக்கெட்டுகளும் அடக்கம்.

சமீபத்தில் வடகொரியா மேற்கொண்ட ஆயுத பரிசோதனைகள், கிங் ஜாங் உன் தன்னுடைய திட்டப்படி ஆயுதங்களை மேம்படுத்தி வருகிறார் என்பதற்குச் சாட்சியமாக இருக்கிறது. அதோடு அந்த ஆயுதங்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என தன் ராணுவ துருப்புகளுக்குப் பயிற்றுவித்து வருவதாகவும் பார்க்கப்படுகிறது.

தென் கொரியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவது போல, வடகொரியா தன்னுடைய சமீபத்திய ராணுவ பயிற்சிகள் பயன்படுத்திக் கொண்டதாக கிம் ஜாங் உன்னே கூறியதாக பிபிசியில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இப்போது கிம்ஜாங் உன்னுக்கு சர்வதேச அரங்கின் கவனம் தேவைப்படுகிறது. கிம் ஜாங் உன் என்ன மாதிரியான முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறார் என்பதை இந்த உலகம் கவனிக்க வேண்டும் என அவர் விரும்புகிறார்.

உலக நாடுகளின் விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகள் வடகொரியாவின் ஆயுத மேம்பாட்டை ஒரு துளி கூட நிறுத்தவில்லை, ஆனால் வடகொரியாவின் பொருளாதாரம் அத்தடைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

வடகொரியா மீது உலக நாடுகள் விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகளைக் குறைத்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் நீண்ட காலமாக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. உலக நாடுகள் கூறும் பல்வேறு விஷயங்களை வடகொரியா கடைப்பிடிக்கவில்லை அல்லது செயல்படுத்தவில்லை.

ஏற்கனவே ஒட்டுமொத்த உலக நாடுகளும் உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போரினால், பல்வேறு பிரச்சனைகளால் பெரிதும் கவலைப்பட்டு வருகின்றன. இது போக ஏகாதிபத்தியத்தையும் சர்வாதிகாரத்தையும் நிலைநாட்டும் சீனாவும் அதிரடியாக வளர்ந்து வருவது சர்வதேச சமூகங்களுக்கு இடையில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனோ, வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகள் அனைத்தும், அவர்கள் தங்களின் அணு ஆயுதங்களை முழுமையாகக் கைவிடச் சம்மதித்தால் மட்டுமே விளக்கிக் கொள்ளப்படும் என்கிற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். மறுபக்கம் அமெரிக்காவும் தென்கொரியாகவும் தங்களுடைய பாதுகாப்பை வலுப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளனர். அதற்காகத்தான் இருநாட்டு ராணுவங்களும் இணைந்து பல்வேறு ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சிகள் வடகொரியாவை மேலும் கடும் அத்திருப்தியிலும் கோபத்திலும் ஆழ்த்தி உள்ளது. 

வடகொரியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான பேச்சுவார்த்தை, வட கொரியாவுக்குச் சாதகமாக அமைய வேண்டும் என்றால், தாங்கள் எத்தகைய ஆபத்தான நாடு என்பதை வட கொரியா நிரூபிக்க வேண்டும் என்கிறது பிபிசி ஊடாக வலைத்தள கட்டுரை. 

அதன் வெளிப்பாடாகத்தான் கடந்த மாதம் வடகொரியா அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடு எனத் தன்னை வெளிப்படையாக அறிவித்துக் கொண்டது. இனி இதை கிம் ஜாங் உன் அல்லது அவரைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்புக்கும் வரும் எந்த ஒரு வடகொரியத் தலைவர் நினைத்தாலும் அந்த நிலைப்பாட்டிலிருந்து இனி பின்வாங்க முடியாது.

எப்போதும் வடகொரியா ஆயுத பரிசோதனைகளையோ தன்னுடைய அதிருப்தியையோ வெளிப்படுத்த வேண்டும் என்றால் அமெரிக்கா தன்னுடைய ராணுவ பயிற்சிகளை எல்லாம் முடித்துக் கொண்ட பிறகுதான் ஆயுதங்களை ஏவி தன் அதிருப்தியை வெளிப்படுத்தும். ஆனால் இந்த முறை வடகொரியா தன்னுடைய ஆர்டில்லரி குண்டுகளை, ராணுவ பயிற்சி நடந்து கொண்டிருக்கும் போதே கடலில் ஏவி தன் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது.

இதுவரை இப்படிப்பட்ட ஆக்ரோஷமான விஷயங்களை நாங்கள் பார்த்ததில்லை, இது மிகவும் வேறுபட்டதாக இருக்கிறது. வடகொரியா ஒரு அணு ஆயுத நாடு போலவே நடந்து கொள்கிறது என தென்கொரியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் முன்னாள் ஆலோசகர் கிம் ஜாங் டே பிபிசி ஊடகத்திடம் கூறியுள்ளார்.

வடகொரியா தன்னுடைய ஏழாவது அணு ஆயுத பரிசோதனைகளை நடத்த எல்லாவற்றையும் தயாராக வைத்திருப்பதாக அமெரிக்கா மற்றும் தென்கொரியா அரசாங்கங்கள் நம்புகின்றன. 

சமீபத்தில் தான் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கிரஸ் கூட்டம் நடந்து முடிந்தது. அமெரிக்காவில் மிட் டேர்ம் தேர்தல்கள் விரைவில் நடக்கவிருக்கின்றன. தன்னுடைய அணு ஆயுத பரிசோதனையை நடத்த ஒரு சரியான அரசியல் தருணத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது வடகொரியா. உலகமோ அமைதியை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?