Putin

 

NewsSense

உலகம்

புடின் ஆலோசகர் ராஜினாமா, முன்னேறும் உக்ரைன், ரஷ்யாவுக்கு பின்னடைவு - கள நிலவரம் இதுதான்!

அத்துடன் ரஷ்யாவின் முன்னேற்றம் வெளிப்படையாகத் தடைப்படுவது போல் தெரிகிறது. அதிபர் புடினுக்கு கிரெம்ளினுக்குள் இருந்தே ஒரு அடி கொடுக்கப்பட்டதாகவே தெரிகிறது.

NewsSense Editorial Team

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு இரண்டாவது மாதத்தை எட்டியுள்ள நிலையில், ரஷ்யா பல பின்னடைவுகளைச் சந்தித்து வருகிறது.

ராஜிநாமா

போர்க்களத்தில், உக்ரேனியப் படைகள் தலைநகரான கியிவ்வின் மேற்கு பகுதியில் ரஷ்யப் படைகளைப் பின்னுக்குத் தள்ளிய சூழலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் முக்கிய ஆலோசகரான ஒருவர் ராஜினாமா செய்துள்ளார்.

எப்படியாக இருந்தாலும், கியிவ் உட்பட உக்ரைனில் உள்ள பல நகரங்களில் கடுமையான தாக்குதல்கள் தொடர்துகொண்டுதான் இருக்கின்றன.

“வடக்கு நகரமான செர்னிஹிவ்வில், கியிவ் நகரத்தை இணைக்கும் ஒரு முக்கியமான பாலம் ஒன்று, முன்னதாகவே அழிக்கப்பட்டதையடுத்து. அது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது” என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

Anatoly

மீண்டும் உக்ரைன் கொடி

கியிவ்வின் மேற்கே உள்ள மகரிவ் நகரத்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகள், உக்ரேனியக் கொடிகள் மீண்டும் அங்குப் பறக்கின்றன என்றும் கூறுகின்றனர்.

தெற்கின் சில பகுதிகளில், உக்ரேனியர்களும் வேகத்தை மாற்றியமைப்பதாக அமெரிக்கப் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.


இங்கிலாந்து பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர், சண்டைக்கான யூக்திகளை ரஷ்யா மாற்றும்படி கட்டாயப்படுத்தப்படலாம் என்றும் கூறியுள்ளார்.


அத்துடன் ரஷ்யாவின் முன்னேற்றம் வெளிப்படையாகத் தடைப்படுவது போல் தெரிகிறது. அதிபர் புடினுக்கு கிரெம்ளினுக்குள் இருந்தே ஒரு அடி கொடுக்கப்பட்டதாகவே தெரிகிறது.


அவரது ஆலோசகர்களில் ஒருவரான அனடோலி சுபைஸ். இவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். படையெடுப்பு தொடங்கியதிலிருந்து ராஜினாமா செய்த மூத்த அதிகாரி இவர் எனச் சொல்லப்படுகிறது. தற்போது இவர் தனது மனைவியுடன் துருக்கியில் இருப்பதாக ரஷ்யன் ரிப்போர்ட்ஸ் தெரிவிக்கின்றன.

Oksana

ரஷ்ய பத்திரிகையாளர் கொலை

போர் தாக்குதலுக்கு மத்தியில், ஒரு ரஷ்ய பத்திரிகையாளரும் கொல்லப்பட்டிருக்கிறார். ஓக்சானா பவுலினா, கியிவ்வின் மேற்கு நகரமான லிவிவ்-இல் இருந்து புலனாய்வு இணையதளமான ‘தி இன்சைடருக்காக’ அறிக்கை அளித்து வந்ததாக அவுட்லெட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


ஓக்சானா பவுலினா முன்னர் ரஷ்ய எதிர்க்கட்சி பிரமுகர் அலெக்ஸி நவல்னியின் ஊழல் எதிர்ப்பு அறக்கட்டளையில் பணியாற்றிவர். மேலும், இவர் ரஷ்யாவை விட்டு ஏற்கெனவே வெளியேறினார்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?