வீட்டுபாடம் செய்யாமல் டிவி பார்த்ததால், இரவு முழுவதும் தூங்காமல் டிவி பார்க்கவேண்டும் என பெற்றோர் தண்டனை அளித்துள்ள சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.
என்ன தான் பள்ளிப்பருவம் கவலையற்றது என நாம் இப்போது கூறினாலும், நம் எல்லோருக்கும் இருந்த முக்கிய பிரச்னை வீட்டுபாடம் செய்வது. ஹோம் ஒர்க் செய்யாமல், டீச்சரிடம் பல விதமான பொய்கள் சொல்லியிருப்போம். ஆசிரியர்களிடமிருந்து கூட சில சமயம் தப்பித்துவிடலாம். ஆனால் வீட்டில் அம்மா அப்பாவிடம் மாட்டீக்கொள்ளாமல் இருப்பது எல்லாருக்கும் வாய்த்திடாத கலை.
இங்கும் ஒரு சிறுவன், ஹோம் ஒர்க் செய்யாமல் இருந்துள்ளான். இதனை அறிந்த பெற்றோர் அவனுக்கு புது விதமான தண்டனையை கொடுத்துள்ளனர். சீனாவின் ஹுனான் நகரத்தை சேர்ந்த பெற்றோர், அவர்களது 8 வயது மகனை வீட்டில் விட்டுவிட்டு சென்றனர். வெளியில் சென்ற தம்பதி, மகனை வீட்டுபாடம் செய்துவிட்டு, 8.30 மணிக்கு தூங்க செல்லுமாறு கூறியிருந்தனர்.
அவர்கள் வீடு திரும்பியபோது, அந்த சிறுவன் ஹோம் ஒர்க்கை முடிக்காமல் டிவி பார்த்தபடி நேரத்தை செலவழித்துள்ளது தெரியவந்திருக்கிறது. மேலும், பெற்றோர் வந்த பிறகு அவன் தூங்க சென்றுள்ளான். இதனால் கோபமடைந்த பெற்றோர் அவனுக்கு தண்டனை கொடுத்தனர்.
உறங்கிக்கொண்டிருந்த சிறுவனை இழுத்துவந்த அவனது தாய், வலுக்கட்டாயமாக டிவி பார்க்க வைத்துள்ளார். மேலும், இரவு முழுவதும் அந்த சிறுவனை அவர் உறங்கவிடவில்லை என்பது தான் இதில் அதிர்ச்சியூட்டும் செயல். முதலில் அந்த சிறுவன் உற்சாகமாகவே டிவி பார்த்தாலும், மெல்ல அவன் உறங்காமல் இருக்க சிரம்ப்படுவது தெரிகிறது.
மேலும், சிறுவன் அவர்களுக்கு தெரியாமல் அறைக்கு சென்று தூங்கிவிட்டால் என்ன செய்வது என்று, கனவனும், மனைவியும், மாறி மாறி அவனை இரவு முழுவதும் கண்காணித்துள்ளனர். இடையில் இடையில் சற்று கண் அயர்ந்த சிறுவனை அவனது தந்தை எழுப்பியும் விடுகிறார்.
அதிகாலை 5 மணி வரை அவனை அவர்கள் உறங்கவிடவில்லை. சிறுவன் உறங்கமுடியாமல் அழுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் பரவியதை அடுத்து, பலரும் பெற்றோரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சிறுவனின் மனதில் இது ஆழ்மாக காயத்தை ஏற்படுத்தியிருக்கும் எனவும், அவன் இனி மனதில் ஒருவித பயத்துடனே வளர்வான் எனவும் சிலர் தெரிவித்தனர். சிலர் ஒரு வேளை இதுவே அவனுக்கு பழக்கமாகி, தினமும் தாமதமாக உறங்கக்கூடும் எனவும் சிலர் தெரிவித்தனர்.
பெரும்பாலும் இணையவாசிகள், பெற்றொர் இவ்வளவு கடுமையாக நடந்துகொள்ள கூடாது என்று கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust