Parrot  Canva
உலகம்

Liveல் நிருபரின் Airpodஐ திருடிய கிளி - இணையத்தில் வீடியோ வைரல்

அவர் அன்று Liveல் அந்த பகுதியில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள் குறித்து பேசிக்கொண்டிருக்கும்போது, ஒரு கிளி அவரது தோளில் வந்து அமர்கிறது.

Keerthanaa R

சிலி நாட்டில் நிருபர் ஒருவர் செய்தி வாசித்து கொண்டிருக்கும்போது, லைவில் கிளி ஒன்று அவரது காதில் பொருத்தியிருந்த இயர்ஃபோனை தூக்கி சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விலங்குகளும் பறவைகளும் செய்யும் சேட்டைகள் வீடியோக்களாக இணையதளத்தில் அவ்வபோது வைரலாகும். இவை வேடிக்கையாகயும் நகைச்சுவையாகவும் இருக்கும்.

அந்த வகையில் நிருபர் ஒருவரிடம் இருந்து கிளி ஒன்று ஏர்பாடை தூக்கி செல்லும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. சிலி நாட்டை சேர்ந்த பத்திரிக்கையாளர் நிகோலஸ் க்ரம். இவர் சிலிவிஷன் என்ற சேனலின் நிருபராக இருக்கிறார்.

அவர் அன்று Liveல் அந்த பகுதியில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள் குறித்து பேசிக்கொண்டிருக்கும்போது, ஒரு கிளி அவரது தோளில் வந்து அமர்கிறது. சிறிது நேரம் அவர் மீது அமர்ந்திருந்த பறவை, அவரது இடது காதில் இருந்த ஏர்பாடை தூக்கி சென்றது.

கிளி அவர் மீது அமர்ந்திருந்தாலும் கண்டுகொள்ளாமல், பேசிவந்தார் நிருபர். கிளி இயர்ஃபோனை தூக்கி சென்ற போதும் அவர் பேசிக்கொண்டே, அதை மீட்கும்படி அவரது குழுவிடம் செய்கை காண்பிக்கிறார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. திருட்டு சம்பவங்கள் குறித்து செய்திகள் வாசித்துக்கொண்டிருந்த நிருபரிடம் ஒரு கிளி ஏர்பாடை திருடி சென்றுள்ளது என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இதற்கு முன்னர், ரஷ்ய நிருபர் ஒருவர் லைவ் ரிப்போர்ட் வாசித்துக்கொண்டிருக்கும்போது, நாய் ஒன்று அவரது மைக்கை தூக்கி சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?